மூல வைகையில் இருந்து தெப்பம்பட்டி கண்மாய்களுக்கு நீர் கொண்டுவர ஆய்வு

Added : அக் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி, தெப்பம்பட்டி கண்மாய்களுக்கு வருஷநாடு மூல வைகை ஓட்டணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து பொதுப்பணித்துறையினர் விவசாயிகளுடன் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வளமான மண் இருந்தும் நீர் வளம் இல்லாததால் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது. மழை குறைவால் ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட
மூல வைகையில் இருந்து  தெப்பம்பட்டி கண்மாய்களுக்கு நீர் கொண்டுவர ஆய்வு



ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் ஜி.உசிலம்பட்டி, தெப்பம்பட்டி கண்மாய்களுக்கு வருஷநாடு மூல வைகை ஓட்டணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து பொதுப்பணித்துறையினர் விவசாயிகளுடன் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வளமான மண் இருந்தும் நீர் வளம் இல்லாததால் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது.

மழை குறைவால் ஒன்றியத்தில் 10க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பல ஆண்டுகளாக நீர் தேங்காமல் நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. மழை பெய்தால் மட்டுமே மானாவாரி விவசாயம் என்ற நிலை தொடர்வதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் விவசாயத்தை காக்க பெரியாறு அணை உபரி நீரை குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிபட்டி பகுதி கண்மாய்களில் தேக்க விவசாயிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடியும் பலன் கிடைக்கவில்லை.



இந்நிலையில் தெப்பம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கணேசபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் புதிய கோரிக்கை முன் வைத்துள்ளனர். அதில் வருஷநாடு மூலவைகை மூலம் மயிலாடும்பாறை ஓட்டணையில் தேங்கும் நீரை கால்வாய் அல்லது குழாய் மூலம் மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி வழியாக தெப்பம்பட்டி கண்மாயில் தேக்க வலியுறுத்துகின்றனர்.



இதனைத் தொடர்ந்து மதுரை பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் விவசாயிகளுடன் இணைந்து திட்டம் குறித்து தெப்பம்பட்டி கண்மாய் அருகே ஆய்வுப்பணி மேற்கொண்டனர். விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சுரேஷ், கோட்டைச்சாமி, அன்பழகன், பழனிச்சாமி, மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
02-அக்-202216:57:22 IST Report Abuse
சீனி நீர்வளத்துறையில் கமிசன், கட்டிங், கலெக்சன் தான் ஆகும், ஆனா நீர் வராது... அடுத்த வருடம் மழை பெய்யலைன்னு சப்பை கட்டுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X