சேவை மனம் கொண்டவர் தினமலர் நிறுவனர்; டி.வி.ஆர்., ஜெயந்தி விழாவில் புகழாரம்

Added : அக் 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மதுரை : மதுரையில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாரதி யுவகேந்திரா சார்பில், 25 பார்வையற்றோர் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது.விருதுநகர் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி டீன் சங்குமணி பேசியதாவது: தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., ஜாதி, சமய வேறுபாடின்றி அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். சேவை மனப்பான்மை உள்ளவர்.
சேவை மனம் கொண்டவர் தினமலர் நிறுவனர்;   டி.வி.ஆர்.,  ஜெயந்தி விழாவில் புகழாரம்மதுரை : மதுரையில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாரதி யுவகேந்திரா சார்பில், 25 பார்வையற்றோர் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் விழா நடந்தது.விருதுநகர் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி டீன் சங்குமணி பேசியதாவது: தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., ஜாதி, சமய வேறுபாடின்றி அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். சேவை மனப்பான்மை உள்ளவர். தமிழுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவர் காட்டிய வழியில் தினமலர் நாளிதழ் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.தினமலரில் வெளியாகும் சிறு எழுத்துக்கள் கூட சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். என்றார்.எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் பேசியதாவது: டி.வி.ராமசுப்பையரின் முயற்சியால் தான் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இணைந்தது. திருவனந்தபுரம் - நெல்லை ரயில் பாதை அமைய முக்கிய காரணமாக இருந்தவர். எளிமையான உணர்வுப்பூர்வமான எழுத்துக்களுக்கு மூலமாக இருந்தவர்.அவரது பாதையில் வீறுநடை போடும் தினமலர் நாளிதழ், மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் பாலமாக இருக்கிறது, என்றார்.முன்னதாக டி.வி.ராமசுப்பையரின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமசுப்பிரமணியன், ஆடிட்டர் சேதுமாதவன், மதுரை எஸ்.எம்.கே. மகால் உரிமையாளர் சுரேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நெல்லை பாலு செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-அக்-202209:05:10 IST Report Abuse
Bhaskaran செயலிழந்த எதிர்க்கட்சிகள் விலைபோன ஊடகங்கள் ஹிந்து மதத்தை ஒழித்தே தீருவது என்று புறப்பட்டிருக்கும் திருமா சைக்கோ முத்தரசன் கும்பல் ஊழல் அதிகாரிகள். இஷ்டத்துக்கு செயல்படும் மந்திரிகள். இவர்களை தட்டிக்கேட்க திறமை இல்லாத முதல்வர். இவர்களுக்கு நடுவில் கலங்கரை விளக்கமென செயல்பட்டு மத நல்லிணக்கத்தை, காத்து பிஞ்சுகள் நெஞ்சில் நல்லொழுக்கத்தை கற்பித்து ஊழல் செய்பவர்களை அடையாளம் காட்டி மக்கள் பிரச்சனைகளை காதுகேளாத அரசுக்கு எடுத்து சொல்லும் ஒரேநாளிதல் தினமலர் அதன் ஐம்பத்தைந்தாண்டு கால வாசகன் என்னும் முறையில் தினமலர் ஸ்தாபகரின் பிறந்தநாள் அன்று மனமார்ந்த வாழ்த்துக்கள் நூற்றாண்டு கொண்டாடி மக்கள் சேவைக்காக மகசேசே விருது வாங்க வாழ்த்துகிறேன்
Rate this:
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
02-அக்-202213:32:21 IST Report Abuse
MARUTHU PANDIARஉண்மையில் கலங்கரை விளக்கம் தான். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தனது பெரும் பகுதி நேரத்தை இளந் தலைமுறையினரை செம்மைப் படுத்தும் பணியில் ஈடு பட்டார். இதோ இங்கே தினமலர் அந்தப் பணியை ஊர் மெச்சும் அளவுக்குச் சிறப்பாக செய்து வருகிறது. பிஞ்சுகளின் உள்ளத்தில் எதிர் காலத்துக்கான குறிக்கோளை ஊட்டி வளர்க்கிறது. அரசியல் களத்தில் இன்னும் சிறப்பாக நாட்டின் நலன் ஒன்றையே மனதில் வைத்து அளப்பரிய வகையில் செயலாற்றுகிறது. இப்படியே இந்த மகத்தான பணி தொடர வேண்டும் என்பது மக்கள் விருப்பம். மக்கள் இப்போது தராதரத்தை அறிந்துள்ளார்கள்....
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
02-அக்-202208:28:17 IST Report Abuse
MARUTHU PANDIAR இந்தச் சமூகத்துக்காக, அதன் நலனுக்காக பத்திரிக்கைத் துறையின் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திரு.டி.வி.ஆர். அவர்களது இறவாப் புகழ் உலகறிந்தது. அவர் ஆற்றிய பணிகள் பற்றி, இனி வருங்காலத் தலைமுறையினர் எல்லோரும் அறிந்து கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் தினமலர் மேற்கொள்ள வேண்டும். சான்றாக வாழ்ந்து காட்டியவர்கள் தான் சான்றோர் என்று அழைக்கப் படுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X