உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை தொகுதி பா.ஜ., அலுவலக பூட்டு உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை, கணேசனார் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 63; பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர். இவருக்கு சொந்தமான கட்டடத்தின் மாடி பகுதியில் பா.ஜ.,அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.பா.ஜ., நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வந்த சம்பவங்களைத் தொடர்ந்து பா.ஜ., நிர்வாகிகளின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், பா.ஜ., அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.