மண்டைக்காடு கோயில் அருகே கிறிஸ்தவ மாநாடு: அனுமதி மறுப்பு சரியே; உயர்நீதிமன்றம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகே கிறிஸ்தவ மாநாடு நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசின் உத்தரவு சரியே. மாற்று இடத்தில் நடத்த அனுமதிக்க கலெக்டர் பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மத்தவிளை முழு நற்செய்தி பெந்தகோஸ்தே சர்ச் போதகர் டைட்டஸ்,' மண்டைக்காடுவில் உள்ள சர்ச்சில் மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை போலீசார்
மண்டைக்காடு பகவதி அம்மன், கிறிஸ்தவ மாநாடு, அனுமதி மறுப்பு, கலெக்டர்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneமதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகே கிறிஸ்தவ மாநாடு நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசின் உத்தரவு சரியே. மாற்று இடத்தில் நடத்த அனுமதிக்க கலெக்டர் பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மத்தவிளை முழு நற்செய்தி பெந்தகோஸ்தே சர்ச் போதகர் டைட்டஸ்,' மண்டைக்காடுவில் உள்ள சர்ச்சில் மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை போலீசார் நிராகரித்தனர். அது சட்டவிரோதம். அனுமதிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்', என மனு செய்தார்.நீதிபதி சத்தி குமார் சுகுமார குருப் உத்தரவு:மனுதாரர் தரப்பில் ஒரு குடியிருப்பை வாங்கியுள்ளனர். பின் அதை வழிபாட்டுத்தலமாக மாற்றியுள்ளனர். இதற்கு அரசிடம் அனுமதி பெறவில்லை. கட்டடத்தை சர்ச்சாக மாற்ற வருவாய் ஆவணங்களில் மாற்றம் செய்யக்கோரி அரசிடம் மனுதாரர் மனு அளித்தார். அதை நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் மாநாட்டிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.latest tamil news
மத மோதல்


மண்டைக்காடுவில் 1982ல் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் இடையில் மத மோதல் ஏற்பட்டது. மதிப்பு மிக்க மனித உயிர்கள் பலியாகின. சொத்துகள் சூறையாடப்பட்டன. எதிர்காலத்தில் மத மோதல்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க நீதிபதி பி.வேணுகோபால் தலைமையிலான கமிஷனை அப்போதைய மாநில அரசு அமைத்தது. அவர் மண்டைக்காடு பகுதியில் மதக் கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை விசாரித்து, அரசுக்கு பரிந்துரைத்தார். ஏற்கனவே பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் வேறு வழிபாட்டுத் தலங்களை அமைக்க எந்த ஒரு நபர் அல்லது எந்த நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கக்கூடாது. ஒலிபெருக்கி, மைக் பயன்படுத்துவது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு பிற மதத்தின் மத நடைமுறைகளில் தலையிடுகிறது என கமிஷன் தெரிவித்துள்ளது. அதை1982ல் மாநில அரசு ஏற்றுக்கொண்டது.


கொந்தளிப்பான இடம்


நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், மத மோதல்களைப் பொறுத்த வரையில் மண்டைக்காடு கொந்தளிப்பான இடமாக அறியப்படுகிறது.மனுதாரர் மாநாடு நடத்த அனுமதி கோரிய இடம் / வளாகம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலிலிருந்து 300 மீட்டர் துாரத்தில் உள்ளது. கோயிலில் பஜனை நடத்துவர். பக்தி பாடல்களை இசைப்பர். மாநாடு நடந்தால் மனுதாரர் தரப்பில் அவரது சமயப் பாடல்களை ஒலிபரப்புவர். இதுபோன்ற சூழலில் மத மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அனுமதி கோரிய மனுவை அரசுத் தரப்பு நிராகரித்துள்ளது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுத் தரப்பு கூறியது.ஒரு நம்பிக்கை அல்லது மதத்தைப் பின்பற்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற மனுதாரர் தரப்பின் வாதங்களை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அந்த வளாகத்தில் மாநாடு நடத்த மட்டுமே அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.அதிகாரிகளால் மத சுதந்திரத்திற்கான உரிமை தடுக்கப்படுகிறது என்ற மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட உரிமைகளின்படி மாநாடு நடத்துவதற்கான உரிமை மனுதாரருக்கு உள்ளது. அதே நேரம்,'உங்கள் கைகளை அசைப்பதற்கான சுதந்திரம் என் மூக்கு இருக்கும் இடத்தில் முடிகிறது,' என்ற பிரஞ்ச் பழமொழி இங்கே பொருந்தும்.சுதந்திரம் மற்றும் உரிமைகள் என்ற பெயரில் மண்டைக்காடு கோயிலில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள வளாகத்தில் மாநாடு நடத்த மனுதாரரை அனுமதிக்க முடியாது. அதிகாரிகள் நிராகரித்தது சரியே. அதிகாரிகளின் முடிவிற்கு அப்பாற்பட்டு இந்நீதிமன்றம் எந்த வழிகாட்டுதலையும் வழங்க முடியாது.


மாற்று இடம்


தற்போது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மனுவில் குறிப்பிட்டுள்ள வளாகத்தைத் தவிர வேறு இடத்தில் மாநாடு நடத்தலாம். பிற மத பழக்க வழக்கங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்று இடத்தை மனுதாரர் தேர்வு செய்யலாம். கல்வி நிறுவனம் அல்லது திருமண மண்டபத்தை மனுதாரர் தேர்வு செய்தால், அக்கோரிக்கையை பொது அமைதியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரி கலெக்டர், எஸ்.பி.,பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனு பைசல் செய்யப்படுகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
03-அக்-202216:42:11 IST Report Abuse
MARUTHU PANDIAR உலகில் எல்லா நாட்டிலும் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்+++அவர்கள் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருக்கிறார்கள்++++ வேலைவெட்டி இல்லாமல் எங்கோ காசு வாங்கிக் கொண்டு கடவுள் எதிர்ப்பை ஒரு முழு நேர தொழிலாக நடத்த வில்லை+++++++ஆனால் நம் நாட்டிலோ,,, அதிலும் தமிழகத்தில் ஓயாமல் துவேஷ பிரச்சாரம் செய்வது,, கோவில் முன்பு நம்பிக்கையை காலில் போட்டு மிதிப்பது போல சிலை வைத்து அங்கு வாசகங்கள் எழுதி வைப்பது,,ஆனால் ஓட்டுக்காக கடவுள் வெறுப்பில்"செலெக்ட்டிவ்" ஆக இருப்பது,, அதிலும் முக்கியமாக அரசியல் நடத்துவதற்காக துவேஷத்தை முக்கிய கருவியாய் பயன் படுத்துவது,,,,,மிரட்டுவது,, ,,,, அன்றாடம் மேடை போட்டு விஷம் கக்குவது இன்னும் எத்தனையோ +++++++++கடவுள் இல்லை என்றால் விடுங்கள்....
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
03-அக்-202208:53:52 IST Report Abuse
MARUTHU PANDIAR இது போன்று குடியிருப்பு பகுதி என வாங்கி, அல்லது ஒரு வனிக வளாகத்தில் ஓரிரு கடையை வாங்கி அதை சிறிது காலத்தில் வேண்டுமென்றே மத வழி பட்டுத் தலமாக மாற்றி அப்புறம் கலாட்டாவை தொடங்குவது
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
02-அக்-202217:39:17 IST Report Abuse
Yesappa நீங்க அடிச்சாலும் எங்க ஆளுங்களுக்கு உரைகாது. ஏன்னா அவ்வளவு காசு வருது எங்க ஆளுங்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X