அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணியன், சிலம்புச்செல்வன் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், துறை சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.