'ஓசி பயணம் வேண்டாம்': வைரலாகும் அடுத்த வீடியோ

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
பல்லடம்: மூதாட்டி வீடியோவை தொடர்ந்து, 'ஓசி பயணம் வேண்டாம்; டிக்கெட் கொடுங்கள்' என, பெண்கள் அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்யும் மற்றொரு வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர், 'எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் செல்லவிரும்பவில்லை' என, அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில், 5 ரூபாயை பெற்றுக்கொண்ட

பல்லடம்: மூதாட்டி வீடியோவை தொடர்ந்து, 'ஓசி பயணம் வேண்டாம்; டிக்கெட் கொடுங்கள்' என, பெண்கள் அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்யும் மற்றொரு வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர், 'எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் செல்லவிரும்பவில்லை' என, அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதியில், 5 ரூபாயை பெற்றுக்கொண்ட கண்டக்டர் மூதாட்டிக்கு டிக்கெட் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.latest tamil news
தற்போது மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள் சிலர், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்கின்றனர். அதில், 'எங்களுக்கு எதற்கு ஓசி பயணம்? சிலிண்டர் விலை ஏறிவிட்டது. எண்ணெய் விலை ஏறிவிட்டது. எல்லா விலையும் ஏறிவிட்டது. ஐந்து ரூபாய் கொடுத்து எங்களுக்கு செல்ல தெரியாதா? நான்கு பஸ்கள் வந்தும் நிற்கவில்லை. எதற்கு நிற்காமல் செல்கின்றீர்கள். எதுக்கு இலவசம். ஓசியில் செல்ல வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. டிக்கெட் கொடுங்கள்' என்கின்றனர்.

பெண்கள் வாக்குவாதம் செய்வதை கண்டு, பஸ் கண்டக்டர் அங்கிருந்து நழுவி செல்கிறார். அரசு பஸ் எண், இவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202219:16:22 IST Report Abuse
Ram pollachi ஒவ்வொரு முறையும் பேருந்து கட்டணம் உயர்த்தும் போதும் நிதி பற்றாக்குறை ஊழியர்களுக்கு சம்பளம் தர என்று கூறியே சமாளிப்பார்கள். பெண்களுக்கு இலவசம் ஆனால் அவர்கள் கொண்டு வரும் சுமைக்கு பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். இந்த முறை வெள்ளி ஒட்டியாணம் கொடுங்க சார் தப்பித்துக் கொள்ளலாம்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-அக்-202217:17:04 IST Report Abuse
ramesh ஆறுகோடி மக்களில் ஒருவர் டிக்கெட் எடுத்தார் என்பது செய்தியா அல்லது விளம்பரமா
Rate this:
P. S. Ramamurthy - Chennai,இந்தியா
02-அக்-202217:55:24 IST Report Abuse
P. S. RamamurthyHere again the passenger should check up the TICKET - No wonder they may get FREE TICKET in DMK MODEL....
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-அக்-202217:15:17 IST Report Abuse
ramesh பணம் தருகிறேன் என்று ஆடம் பிடிப்பவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்க வேண்டியது தான். அரசுக்கும் வருவாய் கிடைக்கும். சிலர் வேண்டுமென்று செய்தி தாளில் வரவேண்டும் என்று விளம்பரத்திற்காக டிக்கெட் எடுப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X