விழுப்புரம்-விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணனுக்கு, தி.மு.க., எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க., மாநில மருத்துவர் அணி இணை செயலாளரான விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு, நன்னாடு முன்னாள் ஊராட்சி தலைவர் மற்றும் தி.மு.க., மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு துணை அமைப்பாளர் முத்துசாமி தலைமையில், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.தோகைப்பாடி தி.மு.க., நிர்வாகிகள் ஜெயமூர்த்தி, ரவீந்தர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.