கள்ளக்குறிச்சி-சின்னசேலத்தில் பட்டாசு விற்பனை உரிமத்திற்காக விண்ணப்பித்தவர்களின் கடைகளை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.சின்னசேலம் பகுதிகளில் பட்டாசு விற்பனை செய்யும் கடைக்காரர்கள் ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்து விற்பனை உரிமம் பெற வேண்டும். இதையொட்டி சின்னசேலத்தில் பட்டாசு உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களின் கடைகளில், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., பவித்ரா ஆய்வு செய்தார்.அப்போது, கடைகளில் 2 வழிகள் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கெட்டில் மண் மற்றும் தண்ணீர் வைக்கப்பட வேண்டும். 2 தீயணைக்கும் கருவிகள் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.எத்தனை ஆண்டுகளாக பட்டாசு விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, தாசில்தார் இந்திரா, வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் தர்மராஜ், கலைவாணி, உதவியாளர்கள் சக்திவேல், வேலுமணி, கோவிந்தசாமி உடனிருந்தனர்.