அடக்குமுறை கையாளும் அரசு: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
திருப்பூர்: ''விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, அடக்குமுறையை கையாள்கிறது,'' என்று, திருப்பூரில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.தி.மு.க., - எம்.பி., ராஜாவின் அவதுாறு பேச்சை கண்டித்தும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: ''விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, அடக்குமுறையை கையாள்கிறது,'' என்று, திருப்பூரில் ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.



latest tamil news




தி.மு.க., - எம்.பி., ராஜாவின் அவதுாறு பேச்சை கண்டித்தும், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் ஆகியோரை கண்டித்தும், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின், அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:
பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வு என, விலைவாசி உயர்வில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் மூலம், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.


latest tamil news




ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., - ஹிந்து மக்கள் கட்சி மீது அவதுாறு பரப்புகின்றனர்.அவதுாறு பரப்புபவர்களை கைது செய்ய வேண்டும்.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசு வழங்கியதில் ஊழல் நடந்தது. அந்த நிறுவனங்களுக்கே மீண்டும் பொருட்கள் வாங்க உத்தரவிடுகின்றனர். விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, குற்றச்சாட்டுகளை சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள தயாராக இல்லை. அடக்குமுறையை கையாள்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - chennai,இந்தியா
02-அக்-202217:23:54 IST Report Abuse
ramesh இவ்வளவு விலை உயர்வை பற்றி பேசிய நீங்கள் பெட்ரோலியம் பொருட்கள் இருமடங்கு விலை ஏற்றதால் அத்தியாவசிய அனைத்து பொருட்களும் விலை ஏற்றதால் நாட்டு மக்கள் அவதி படுகிறார்களே அது உங்கள் கண்ணில் தெரிய வில்லையா
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
02-அக்-202217:20:26 IST Report Abuse
ramesh கோவையில் பெற்றுப் குண்டு வீசி மாட்டிக்கொண்டது உங்கள் கட்சி காரன் தானே
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
02-அக்-202216:33:07 IST Report Abuse
Duruvesan திராவிட மாடல் என்பது ஹிந்துக்களை மட்டுமே கைது செய்வது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X