அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்று!

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: 'தினமலர்' நாளிதழ் வரும் 5ம் தேதி விஜய தசமி தினத்தன்று நடத்தும், 'அ'னா, 'ஆவ'ன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய சான்று வழங்கப்பட உள்ளது.'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி,

சென்னை: 'தினமலர்' நாளிதழ் வரும் 5ம் தேதி விஜய தசமி தினத்தன்று நடத்தும், 'அ'னா, 'ஆவ'ன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய சான்று வழங்கப்பட உள்ளது.

'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரம் ஆகிய இடங்களில், வரும் 5ம் தேதி, விஜயதசமி தினத்தன்று நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.துரைசாமி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் டாக்டர் காமகோட்டி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பின்னணி பாடகி பத்மபூஷன் பி.சுசீலா பங்கேற்று இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை துவக்கி வைக்கின்றனர்.



latest tamil news




மேலும், பரதநாட்டிய கலைஞர் ஷீலா உன்னிகிருஷ்ணன், விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி., - எம்.ரவி, நாடக கலைஞர் டி.வி.வரதராஜன், தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர் அனிதா குப்புசாமி மற்றும் கல்வி யாளர்கள் பலரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகளை பங்கேற்க வைத்து, அவர்களை கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.
முன்பதிவு அவசியம்.எனவே, தங்களின் குழந்தைகளை பங்கேற்க வைக்க விரும்புவோர் குழந்தை பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் விபரங்களை, தாங்கள் பங்கேற்க விரும்பும் பகுதிக்கென குறிப்பிடப்பட்டு உள்ள மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ் அப்' அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். மழலைகள் அரிச்சுவடி எழுதிய உடனே, புகைப்படத்துடன் கூடிய, 'தினமலர்' நாளிதழின் சான்றிதழ் வழங்கப்படும்.

அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து எவர்வின் கல்வி குழுமம், ஆவின் நிறுவனம் நடத்துகின்றன.


நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் / பதிவு செய்ய வேண்டிய மொபைல் எண்



வடபழநி: அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26 / 99443 09681
பெரம்பூர்: எவர்வின் வித்யாஷ்ரம், 32/ 134 பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை - 12 / 98843 91342
தாம்பரம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 539, வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை - 59/ 97511 36644 .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
02-அக்-202213:29:01 IST Report Abuse
Sampath Kumar ...........
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
02-அக்-202209:45:25 IST Report Abuse
மலரின் மகள் தின மலரின் இந்த சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். கரைந்து போகின்ற நமது பாரம்பரியத்தை துளிர்விட்டு மலரச்செய்யும் முயற்சி. கேரளாவில் இன்றும் தொடர்கிறது விஜயதசமி பாரம்பரியம். மழலைகளின் முதல் எழுத்து புகைப்பட ஓவியமாக சான்றுடன் வழங்குவது சிறப்பு. பெற்றோர்கள் தாத்தா பாட்டியினர் தங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து மனமகிழ்வடைவர் காலம் முழுதும். ஒரு விண்ணப்பம். போட்டோக்கள் அனைத்தையும் மலரின் பொக்கிஷம் பகுதியில் வைக்கலாம். தமிழாசிரியர்களை வைத்து தமிழ் முதலெழுத்தை எழுத செய்வது மரபு, விஜயதசமி திருநாளில். பெற்றோர்கள் விரும்பும் தமிழாசிரியர்களை வைத்து எழுத்தறிவிக்கும் துவக்கம் காணலாம். ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான ஒரு பிணைப்பை சீராக்கும். அதன் பிறகு புகழ் கொண்டோர் மூலம் தொடரலாம். உங்களின் ஆசிரியர் குழுவிலுருப்போரே கூட மழலையருக்கு அரிச்சுவடி எழுதுவதை அடியெடுத்து தரலாம். திரு எல் முருகராஜ் போன்றோர் என் மனதில் வருகிறார்கள். நன்றி.
Rate this:
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
02-அக்-202209:23:21 IST Report Abuse
Kundalakesi Parents irukum pothu ivargal yaar kayay pidithu elutha.. ponga angittu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X