நூல் விலை கிலோ ரூ.40 குறைந்தது; பின்னலாடை துறையினர் மகிழ்ச்சி

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருப்பூர்: பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தப்படும் நுால் விலை, கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.பருத்தி, பஞ்சுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்தாண்டு துவக்கத்தில், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்தது. பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் நுால் விலை, வரியுடன் சேர்த்து, அதிகபட்சமாக கிலோ 440 ரூபாயாக உயர்ந்தது. ஒப்பந்தம் செய்தபடி ஆடைகளை தயாரித்து அனுப்ப
பருத்தி வரத்து அதிகரிப்பு, நூல் விலை, பின்னலாடை துறை,

திருப்பூர்: பின்னலாடை தயாரிக்க பயன்படுத்தப்படும் நுால் விலை, கிலோவுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.

பருத்தி, பஞ்சுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்தாண்டு துவக்கத்தில், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்தது. பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் நுால் விலை, வரியுடன் சேர்த்து, அதிகபட்சமாக கிலோ 440 ரூபாயாக உயர்ந்தது. ஒப்பந்தம் செய்தபடி ஆடைகளை தயாரித்து அனுப்ப முடியாமல், ஏற்றுமதியாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

பருத்தி வரத்து அதிகரித்த பின், ஜூலை மாதத்தில் இருந்து நுால் விலை படிப்படியாக குறைய துவங்கியது. ஜூலையில் 40, ஆகஸ்டில் 30 ரூபாய் விலை குறைந்தது. தற்போது, நுால் விலை மேலும், 40 ரூபாய் குறைந்துள்ளதால், பின்னலாடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகம் பயன்படுத்தும், 30ம் நம்பர் நுால் விலை, உச்சகட்ட விலையில் இருந்து, கிலோவுக்கு, 110 ரூபாய் குறைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'கோம்டு ரக நுால், 20 ரகம் - கிலோ 292 ரூபாய், 24 ரகம் - 302, 30 ரகம் - 312, 34 ரகம் -325, 40 ரகம் -345 ரூபாய் என, இம்மாதம் விலை குறைந்துள்ளது. 'செமி கோம்டு' ரகத்தில், 20 ரகம் - 282 ரூபாய், 24 ரகம் -292, 30 ரகம் - 302, 34 ரகம் -315, 40 ரகம் -335 ரூபாய் என (வரி நீங்கலாக) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், குளிர்கால ஆடை 'ஆர்டர்'களை ஒப்பந்தம் செய்ய முடியும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
binakam - chennai,இந்தியா
02-அக்-202221:18:20 IST Report Abuse
binakam பஞ்சு விலை ஏறினப்போ மோதிஜி யை திட்டி கூப்பாடு போட்ட வங்க இப்போ வாய்மூடிக்கிட்டு இருப்பீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X