டெக்கோ ஹட் நிறுவனத்தின் சார்பில், தீபவாளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோட்டில் பெருந்துறை சாலையில், ஆலயமணி திருமண மண்டபத்தில், பெண்களுக்கான அனைத்து வகை ஆடை மற்றும் அணிகலன் கண்காட்சி, விற்பனை நேற்று தொடங்கியது.
இதுகுறித்து டெக்கோ ஹட் நிறுவனர் உமா சுரேஷ் கூறியதாவது: தமிழகம் மற்றும் பெங்களூரு பகுதிகளை சேர்ந்த, ஜவுளி விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர் கடை அமைத்துள்ளனர். சுடிதார், குர்தீஷ், சல்வார், பட்டுப்புடவை, காட்டன் புடவை உள்ளிட்டவை விற்பனைக்கு உள்ளது. இயற்கை முறையிலான அழகு சாதன பொருட்கள், அணிகலன், பாரம்பரிய கூடை, கைவினை பொருட்களும் கிடைக்கும். பெண்களுக்காக பிரத்யேக ஜவுளி விற்பனை நடக்கிறது. இன்று இரவு, 9:௦௦ மணியுடன் விற்பனை நிறைவடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.