ஒன்பது இடங்களில் பி.எஸ்.என்.எல்., '4ஜி' டவர் நிறுவப்பட உள்ளது.
இதுகுறித்து ஈரோடு பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:
ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டத்தில், 8.50 லட்சம் பி.எஸ்.என்.எல்., மொபைல் சிம்கார்டு கஸ்டமர்கள் உள்ளனர். ஏற்கனவே, 323 டவர் மூலம் சேவை வழங்கப்படுகிறது. இதில், 222 டவர் '3ஜி' சேவை வழங்குகிறது. அனைத்து டவர்களும் விரைவில், '4ஜி' வசதியுடன் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மலைப்பகுதியான பர்கூர், பர்கூர் வடக்கு, பர்கூர் தெற்கு, குன்றி, கூத்தம்பாளையம், தலமலை, உள்ளேபாளையம், குத்தியாலத்துார், பாடபட்டா என ஒன்பது இடங்களில் '4ஜி'க்காக புதிய டவர் அமைக்கப்படும். இப்பகுதி தனியாரால் சேவை வழங்காத இடமாகும். இவ்வாறு அவர் கூறினார்.