ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியின், 11வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார்.
அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவன செயலாளர் திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குனர் செந்தில் ஜெயவேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விப்ரோ நிறுவன, மனித வள மேம்பாட்டு துறை முதன்மை வளாக தேர்வாளர் லவணம் அம்பெல்லா, 937 மாணவ--மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் பேசியதாவது: நந்தா தொழில் நுட்ப கல்லுாரி, ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் பல சாதனை படைத்துள்ளது. நடப்பு கல்வியாண்டில், கல்லுாரியின், 85 சதவீத மாணவர்கள், உலகளவில் செயல்பட்டு வரும் டெக் மகேந்திரா, ஐ.பி.எம்., கேப்-ஜெமினி, ஐ-நாட்டிக்ஸ், எல்.அன்.டி., மற்றும் இன்போடெக், சி.டி.எஸ்., கோடிபி, வேர்னாலிஸ், இ.பி.டெக், இன்போசிஸ், என்.எஸ்.இன்ஸ்ட்ருமன்ஸ் போன்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.