மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : அக் 02, 2022 | |
Advertisement
கரூர்: காவிரியாற்றில் மாயனுார் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது.கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,664 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,991 கன அடியாக, தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 8,871 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 கன அடி


கரூர்: காவிரியாற்றில் மாயனுார் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு நேற்று அதிகரித்தது.
கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,664 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,991 கன அடியாக, தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன பகுதி சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 8,871 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 326 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 750 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 85.27 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நேற்று காலை, நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 32.94 கன அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.94 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் வினாடிக்கு, 120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X