சிதம்பரம் அருகே, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், நவராத்திரி விழாவையொட்டி, கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.
சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், நவராத்திரி விழாவையொட்டி, ஆதிபராசக்தி அன்னைக்கு கடந்த 25ம் தேதி முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், கொலு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடந்து வருகிறது.நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் கலச விளக்கு பூஜை நடந்தது. கலச விளக்கு வேள்வி பூஜையை, மாவட்ட தலைவர் கிருபானந்தம் துவக்கி வைத்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி, மாவட்ட செயலர் செல்வராஜ், தணிக்கை குழு செயலர் கணபதி, கூடுதல் செயலர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.விழாவில், வட்ட தலைவர்கள் ஜவகர், கண்ணன், பிரசாரக்குழு அருளானந்தம், மணிவாசகம், பேராசிரியர்கள் ஞானகுமார், பாலகுமார், கருணாமூர்த்தி, சிவக்குமார், மகளிரணி லதா காளிமுத்து, மஞ்சுளா, சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.