புளோரிடாவை தாக்கிய இயன் புயல்: பலி 44 ஆக அதிகரிப்பு: பிரதமர் இரங்கல்

Updated : அக் 03, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயன் என்ற கடுமையான சூறாவளி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு, நமது பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை(செப்.,28) இயன் என்ற என்ற சூறாவளி கரையை கடந்தது. அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் இதுவும் என கூறப்படுகிறது.
Hurricane Ian,  Devastate, Florida,  இயன், புயல், சூறாவளி, புளோரிடா

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயன் என்ற கடுமையான சூறாவளி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு, நமது பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை(செப்.,28) இயன் என்ற என்ற சூறாவளி கரையை கடந்தது. அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் இதுவும் என கூறப்படுகிறது. இதனால், புளோரிடா கடுமையான பேரழிவை சந்தித்துள்ளது.



latest tamil news



வீடுகள், உணவகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அதுவும் லீ கவுண்டி என்ற இடத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், புயல் காரணமாக நேரடியாகவும் மற்றும் மறைமுக காரணங்களாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஐ தாண்டும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் புயலால் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



latest tamil news



புயலால் பேரழிவை சந்தித்த பகுதிகளில் மீட்பு பணிகளில் அப்பகுதி மக்களும் இணைந்துள்ளனர்.




பிரதமர் இரங்கல்


இயல் புயலால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: இயல் புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பேரழிவுக்காக அமெரிக்க அதிபர் மற்றும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், அமெரிக்க மக்களின் நினைவாக எங்களது நினைவுகள் உள்ளன எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-அக்-202213:35:04 IST Report Abuse
Ramesh Sargam புளோரிடா மாகாண மக்களே மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். புயலில் சிக்குண்டு இறந்த அணைத்து மக்களின் குடும்ப உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் ஷாந்தி.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-அக்-202213:26:22 IST Report Abuse
Sampath Kumar இந்த புயலுக்கு முக்கிய காரணம் சுற்று சூழ் நிலை தான் தொடர்ந்து இயற்கையை பாதிக்கும் வண்ணம் செயற்படும் அமெரிக்காவிற்கு இது தேவை தான் குர்டிங் பத்திரிகை அன்றய சொன்னது அது நிறைவேறி விட்டது அடுத்து வறட்சி இந்தியா பக்கம் பொறுத்து இருந்து பாருங்கள்
Rate this:
Cancel
Fastrack - Redmond,இந்தியா
02-அக்-202213:11:13 IST Report Abuse
Fastrack ட்ரம்பின் மாகாணம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X