பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் லில்லி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வனத்துறை, போக்குவரத்துறை, நூலகம், உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபைக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். அப்போது தலைவர், பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது தலைவர் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டது. அதனையடுத்து கிராம சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் தாக்குதல் தொடர்பாக தலைவர் லில்லி, மண்ணாத்திவயல் பகுதியை சேர்ந்த பாபு, நாசர் ஆகியோர் மீது சேரம்பாடி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.