வத்தலக்குண்டு வாழைக்காய் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு அதிக அளவிலான வாழைத்தார் விற்பனைக்கு வந்தன.
நவராத்திரி சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை நாட்களில் நல்ல விலை கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் ஒரே நேரத்தில் வாழைத்தார்கள் வெட்டியதால் சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்தது. வரத்து அதிகரித்த போதும் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. நல்ல விளைச்சல் உள்ள செவ்வாழைத்தார் ரூ.1000, ரஸ்தாளி ரூ. 600, பூவன் 400 கற்பூரவள்ளி 600 க்கு விற்றது. நாட்டுக்காய் ரூ.400, ஒட்டுநாடு ரூ.300க்கு ஏலம் எடுக்கப்பட்டது. வியாபாரிகளுக்கு தட்டுப்பாடு இன்றி வாழைத்தார்கள் கிடைத்ததால் அதிக அளவில் விற்பனையாகின. விவசாயிகளுக்கும் போதுமான விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.