சிறுத்தை கொலை: ரவீந்திரநாத் தோட்ட மேலாளர்கள் கைது

Added : அக் 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பெரியகுளம்: பெரியகுளம் வடக்குமலை காப்புக்காட்டில் சிறுத்தை கொலையான சம்பவத்தில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வரட்டாறு வடக்கு மலை காப்புக்காட்டில், தென்கரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காப்புக்காடு எல்லையில், 'சோலார்' மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.இதில், செப்., 27 காலை பெண் சிறுத்தை உயிருக்கு போராடுவதாக,
சிறுத்தை, தோட்ட மேலாளர்கள், கைது, ரவீந்திரநாத், எம்பி, கைது, அதிமுக,

பெரியகுளம்: பெரியகுளம் வடக்குமலை காப்புக்காட்டில் சிறுத்தை கொலையான சம்பவத்தில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வரட்டாறு வடக்கு மலை காப்புக்காட்டில், தென்கரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காப்புக்காடு எல்லையில், 'சோலார்' மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.இதில், செப்., 27 காலை பெண் சிறுத்தை உயிருக்கு போராடுவதாக, ரேஞ்சர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் பெண் சிறுத்தையை காப்பாற்றினர்.



அப்போது உதவி வனப்பாதுகாவலரை சிறுத்தை தாக்கியது. மறுநாள், 2 வயது ஆண் சிறுத்தை சோலார் மின்வெளி கம்பி வயிற்றுப் பகுதியில் சுற்றி, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடந்தது.சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். தேனி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(35) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.



இந்நிலையில், அந்த நிலம் தேனி எம்.பி., ரவீந்திரநாத்திற்கு சொந்தமான நிலையில், தோட்ட மேலாளர்கள் தங்கவேலு, ராஜவேலு ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202206:21:24 IST Report Abuse
Mani . V பள்ளியில் மரணம் நடந்தால் பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்படும்பொழுது, சிறுத்தை கொலைக்கு தோட்டத்தின் உரிமையாளர் ரவீந்திரநாத் தானே கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்? அப்படியென்றால் ஆளுக்கு தக்கபடிதான் சட்டமா?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-அக்-202223:59:58 IST Report Abuse
அசோக்ராஜ் டீக்கடையின் வாரிசு காட்டையும் ஆக்ரமிச்சுட்டானா? திருட்டு சோறு.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
02-அக்-202216:01:02 IST Report Abuse
a natanasabapathy நிலத்துக்கு சொந்தக்காரனை கைது செய்யாமல் விட்டது ஏன் dmk வுக்கு ஆதரவாக இருப்பதாலா Septic tank சுத்தம் செய்யும்போது தொழிலாளி இருந்துவிட்டால் வீட்டு சொந்தக்காரரை கைது செய்து siraiyil.அடைக்கிறீர்களே. அது எந்த விதத்தில் நியாயம் திராவிட மாடல் அரசே . இதே பழனிசாமி ஆதரவு mp ஆக இருந்தால் அவர்மீது வழக்கு thoduthu இருப்பீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X