மஹாத்மா காந்தியை போல் இந்தியாவை ஒன்றிணைப்போம்: ராகுல்

Updated : அக் 03, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
மைசூரு: அநீதிக்கு எதிராக மஹாத்மா காந்தி நாட்டை ஒருங்கிணைத்தது போல் நாமும் இந்தியாவை ஒன்றிணைப்போம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் கர்நாடகாவில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில்
Congress, Rahul, Rahul Gandhi,  India, இந்தியா, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மைசூரு: அநீதிக்கு எதிராக மஹாத்மா காந்தி நாட்டை ஒருங்கிணைத்தது போல் நாமும் இந்தியாவை ஒன்றிணைப்போம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் கர்நாடகாவில் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.


latest tamil news




தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உண்மை மற்றும் அகிம்சை வழியில் நடக்க மஹாத்மா காந்தி நமக்கு கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம், மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை விளக்கினார். காந்தி ஜெயந்தியான இன்று, அவர் அநீதிக்கு எதிராக நாட்டை ஒருங்கிணைத்தது போல, நாமும் இந்தியாவை ஒன்றிணைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் எனக்கூறியுள்ளார்.


latest tamil news



தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: "ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கத்தை வழங்கிய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள். ராணுவ வீரர்களும் விவசாயிகளும் இந்தியாவின் முதுகெலும்பு. இன்று, நாட்டின் சர்வாதிகார அரசு அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.நம் முன்னோர்களைப் போலவே நாமும் அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம். அவர்களுக்கு அநீதி இழைக்க ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன் எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202211:14:13 IST Report Abuse
ராஜா இந்திய அரசியல் தான் தெரியாது, வரலாறு கூடவா தெரியாது? காந்தியால் தான் ஒன்றாக இருந்த இந்தியா நான்காக பிரிக்கப்பட்டது.
Rate this:
Cancel
03-அக்-202210:32:51 IST Report Abuse
kulandai kannan நாடு முழுதும் பிரிவினைவாத குன்றிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, சாத்தான் வேதம் ஓதுகிறது.
Rate this:
Cancel
03-அக்-202210:32:51 IST Report Abuse
kulandai kannan நாடு முழுதும் பிரிவினைவாத குன்றிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, சாத்தான் வேதம் ஓதுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X