இந்திய வரலாற்றில் இருண்ட ஆண்டு 1984: அமெரிக்க செனட்டர்

Updated : அக் 03, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
வாஷிங்டன்: சீக்கிய கலவரம் நடந்த 1984ம் ஆண்டு, இந்தியாவின் நவீன வரலாற்றில், இருண்ட ஆண்டாக அமைந்து விட்டதாக அமெரிக்க செனட்டர் பாட் டூமே கூறியுள்ளார்.கடந்த 1984ம் ஆண்டு, அக்.,31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா, சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் சீக்கியர்களை குறி வைத்து கலவரம் வெடித்தது. அதில் 3 ஆயிரம்
india, us senator, sikh, sikh community,  இந்தியா, அமெரிக்கா, செனட்டர், சீக்கியர், சீக்கிய கலவரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: சீக்கிய கலவரம் நடந்த 1984ம் ஆண்டு, இந்தியாவின் நவீன வரலாற்றில், இருண்ட ஆண்டாக அமைந்து விட்டதாக அமெரிக்க செனட்டர் பாட் டூமே கூறியுள்ளார்.



கடந்த 1984ம் ஆண்டு, அக்.,31ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா, சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் சீக்கியர்களை குறி வைத்து கலவரம் வெடித்தது. அதில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இருந்து தேர்வான செனட்டரான பாட் டூமே, அமெரிக்க சீக்கிய காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.



சீக்கிய கலவரம் தொடர்பாக அவர் கூறியதாவது: இந்தியாவின் நவீன வரலாற்றில் 1984ம் ஆண்டு இருண்ட ஆண்டாக அமைந்துவிட்டது. இந்தியாவில் பழமைவாத குழுக்கள் இடையே வன்முறை ஏற்பட்டதை உலகம் பார்த்துள்ளது. அதில், பல சீக்கிய சமுதாயத்தை குறிவைத்து நடந்துள்ளது. இந்த கலவரத்தால், பலாத்காரம், கொலை, இடம்பெயர்தல் உள்ளிட்ட பல பாதிப்புகளால் 30 ஆயிரம் சீக்கிய ஆண்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை தடுக்க, அவர்களின் கடந்த காலங்களை அங்கீகரிக்க வேண்டும். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.



latest tamil news



மேலும், இது போன்ற துயரங்களால் சீக்கிய சமுதாயம் மற்றும் உலகில் உள்ள பல்வேறு தரப்பினர் வருங்காலங்களில் இது போன்று மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், சீக்கிய சமுதாயம் 600 ஆண்டு வரலாறு கொண்டது. உலகம் முழுவதும் 3 கோடி பேர் வசிக்கின்றனர். அமெரிக்காவில் 7 லட்சம் பேர் வசிக்கின்றனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவில் சீக்கிய சமுதாயத்தினர் பலசரக்கு பொருட்கள், மாஸ்க்குகள் உள்ளிட்டவற்றை மதம், பேதம் பார்க்காமல் விநியோகம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
03-அக்-202208:33:40 IST Report Abuse
சீனி டாஸ்மாக் தந்த கட்சிக்கு தமிழர்கள் எப்படி ஓட்டு போட்டுகின்றனரோ, தங்கள் தலையில் கொள்ளிவைத்த காங்கிரசுக்கு ஓட்டு போடுவது சீக்கியர்களின் அறியாமையை காட்டுக்கிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
03-அக்-202200:23:38 IST Report Abuse
M  Ramachandran ஆம் ஆத்மீ ஒரு திருட்டு புரட்டு கட்சி. பொயயை திருத்தி மக்களய் திசை திருப்பி ஒட்டு வாங்கி வருகிறது. அதன் டில்லி அரசிய யில் நடக்கும் நடப்பதையை தான் பார்த்து கொண்டிருக்கிறோமெ.அதன் உண்மையை சொரூபம் தெரிந்ததும் தூக்கி ஏரிய படுவார்கள்.
Rate this:
Cancel
Dharmavaan - Chennai,இந்தியா
02-அக்-202221:05:11 IST Report Abuse
Dharmavaan குஜராத்தை பற்றி இன்னும் புலம்பும் திருடர்கள் சீக்கிய இனப்படுகொலை பற்றி வாய் திறப்பதில்லை.திருடர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X