செப்டம்பரில் இரு மடங்கு அதிகரித்த கார் விற்பனை: சூசுகி செம்ம ஹாப்பி

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | |
Advertisement
செப்டம்பரில் கார்களின் விற்பனை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 1,76,306 கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சூசுகி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சூசுகி கடந்தாண்டு இதே மாதத்தில் 86,380 கார்களை விற்பனை செய்திருந்தது. அப்போது, எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் பற்றாக்குறை நிலவியதால், கார்கள்
மாருதி சூசுகி, செப்டம்பர், கார்கள் விற்பனை, இரு மடங்கு, அதிகரிப்பு, Maruti Suzuki, Car, September, Sales, increase, two fold.


செப்டம்பரில் கார்களின் விற்பனை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 1,76,306 கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சூசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.



இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சூசுகி கடந்தாண்டு இதே மாதத்தில் 86,380 கார்களை விற்பனை செய்திருந்தது. அப்போது, எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் பற்றாக்குறை நிலவியதால், கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது செப்டம்பரில், மாருதி சூசுகியின் உள்நாட்டு கார் விற்பனை இருமடங்கு அதிகரித்து, 1,54,903 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 2021 செப்டம்பரில், 68,815 கார்களை மட்டுமே விற்பனையை செய்திருந்தது.

சிறிய ரக கார்களான ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ கார்களின் விற்பனை 29,574 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 14,936 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதேபோன்று, நடுத்தர ரக கார்களான ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனா, டிசையர் உள்ளிட்ட கார்களின் விற்பனை 72,176 ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டில், இப்பிரிவில், 20,891 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.


latest tamil news


சேடன் பிரிவில் சியாஸ் கார்கள் 1,359 ஆக விற்பனை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில், 981 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. பிற பயன்பாட்டு கார்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் மற்றும் எர்டிகா கார்களின் விற்பனை 32,574 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், 18,459 கார்கள் மட்டுமே விற்பனையாகி

இருந்தது.


கார்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, நடப்பாண்டு செப்டம்பரில் 21,403 கார்கள் ஏற்றுமதியாகி உள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், 17,565 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X