செப்டம்பரில் கார்களின் விற்பனை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 1,76,306 கார்களை விற்பனை செய்துள்ளதாக மாருதி சூசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சூசுகி கடந்தாண்டு இதே மாதத்தில் 86,380 கார்களை விற்பனை செய்திருந்தது. அப்போது, எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் பற்றாக்குறை நிலவியதால், கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது செப்டம்பரில், மாருதி சூசுகியின் உள்நாட்டு கார் விற்பனை இருமடங்கு அதிகரித்து, 1,54,903 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 2021 செப்டம்பரில், 68,815 கார்களை மட்டுமே விற்பனையை செய்திருந்தது.
சிறிய ரக கார்களான ஆல்டோ, எஸ் பிரஸ்ஸோ கார்களின் விற்பனை 29,574 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 14,936 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இதேபோன்று, நடுத்தர ரக கார்களான ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனா, டிசையர் உள்ளிட்ட கார்களின் விற்பனை 72,176 ஆக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டில், இப்பிரிவில், 20,891 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.
![]()
|
சேடன் பிரிவில் சியாஸ் கார்கள் 1,359 ஆக விற்பனை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில், 981 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. பிற பயன்பாட்டு கார்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் மற்றும் எர்டிகா கார்களின் விற்பனை 32,574 ஆக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், 18,459 கார்கள் மட்டுமே விற்பனையாகி
இருந்தது.
கார்கள் ஏற்றுமதியை பொறுத்தவரை, நடப்பாண்டு செப்டம்பரில் 21,403 கார்கள் ஏற்றுமதியாகி உள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், 17,565 கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.