பந்தலூர் : நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திச்சால் பகுதியில் மேத்யூ என்பவரின் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கில் சிக்கியிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வன அலுவலர் அனஸ்தீஷ்யா, முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஸ்குமார் தலைமையிலான, குழுவினர் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர், நேற்று நள்ளிரவு 1, மணிக்கு, சுருக்கிலிருந்து சிறுத்தையை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுத்தை முதுமலை புலிகள் காப்பக முகாமில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறுத்தையின் உடல் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அனீஷ்ராஜன் 39 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.