விவசாயத்துறையில் ஊழல் :பீகார் அமைச்சர் ராஜினாமா

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
பாட்னா: பீகார் மாநில விவசாயத்துறையில் ஊழல் மலிந்து விட்டதாக கூறி அமைச்சர் சுதாகர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இவரது கட்சியை சேர்ந்தவர் விவசாயத்துறை அமைச்சர் சுதாகர் சிங். விவசாயத்துறையில் கீழ் மட்டம்

பாட்னா: பீகார் மாநில விவசாயத்துறையில் ஊழல் மலிந்து விட்டதாக கூறி அமைச்சர் சுதாகர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.



latest tamil news



பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இவரது கட்சியை சேர்ந்தவர் விவசாயத்துறை அமைச்சர் சுதாகர் சிங். விவசாயத்துறையில் கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரையில் ஊழல் மலிந்து விட்டது என தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக தேஜஸ்வி யாதவ்விற்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடித்தத்தில் அவர் கூறி இருப்பதாவது: விவசாயிகளுக்கான மண்டி சட்டம்( விவசசாய உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழு சட்டம்) கடந்த 2006ம் ஆண்டு காலவாதியாகி விட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்தினால் விவசாயிகளுக்கு நேரடி பலன் கிடைக்கும். ஆனால் சட்டத்தை நிறைவேற்றாமல் அரசும் அதிகாரிகளும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இத்துறையில் கீழ் மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரையில் பகிரங்கமாக ஊழல் நடக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் நிதிஷ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது சுதாகர் சிங்கின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கருத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய போது கூட்டத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் அரசாங்கத்திற்குள் உள்ள ஊழல் விவகாரத்தை தான் சரியாக சுட்டிக்காட்டியதாகவும் தனது அறிக்கையில் உறுதியாக இருப்பதாகவும் சுதாகர்சிங் கூறி உள்ளார்.

முன்னதாக முதல்வர் நிதிஷ்குமார் மாநில அரசில் ஊழல் பிரச்னை இல்லை. யாராவது ஊழல் செய்தால் சிறைக்கு செல்வர் என கூறி இருந்தார்.


latest tamil news



மேலும் முதல்வர் நிதிஷ்குமாரை மகிழ்விப்பதற்காக சுதாகர் சிங்கை ராஜினாமா செய்யுமாறு தேஜஸ்வி யாதவ்விற்கு அழுத்தம் கொடுத்தாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-அக்-202212:58:18 IST Report Abuse
அநாமதேயம் பீகாரில் எப்போது ஊழல் குறையும் இன்னும் எத்தனை வருடங்கள் இந்த அரசியல் வாதிகள் திருந்த எடுத்துக்கொள்வார்கள்.மக்கள் தான் திருத்த வேண்டும் இந்த அரசியல் வாதிகளை குடும்பத்திற்குன்டான சொத்துக்கள் இலங்கை போராட்டம் போன்ற போராட்டம் நடந்தால் மட்டுமே சாத்தியம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
03-அக்-202208:45:42 IST Report Abuse
Bhaskaran நம்ம ஊர் அதிகாரிகள் லஞ்சத்தில் பாதியை மந்திரிகளுக்கு கொடுப்பதால் கழுதைப்பிடித்து தள்ளினாலும் பதவியில் விட்டு போக மாட்டாங்க நாற்காலியை இறுக்கமாக பிடிசிப்பாங்க
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-அக்-202221:48:21 IST Report Abuse
NicoleThomson இவர் ஏற்கனவே வலியை வெளிப்படுத்தியிருந்தார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X