ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டி சிவசேனா தலைவர் ஏக்நாத்ஷிண்டே முதல்வராக உள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த பா.ஜ.,வின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் முதல்வர்

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத்ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



latest tamil news


மகாராஷ்டிரா மாநிலத்தில் போட்டி சிவசேனா தலைவர் ஏக்நாத்ஷிண்டே முதல்வராக உள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த பா.ஜ.,வின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் முதல்வர் ஏக்நாத்ஷிண்டேவை கொலை செய்யப்போவதாக தொலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான மலபார் ஹில் மற்றும் தனிப்பட்ட இல்லமான வர்ஷாவிலும் பாதுகாப்பபு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொலைபேசியில் மிரட்டியவர் யார் என்பது குறித்தும் எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்தும் கண்டறிவதற்காக மாநிலத்தின் உள்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் கூறுகையில், ஏக்நாத்ஷிண்டே முதல்ராக பதவியேற்றது முதல் கடுமயைாக உழைத்து முடிவுகளை எடுத்து வருகிறார். அவரின் முடிவுகளால் சில பேர் வருத்தப்படலாம். இந்தமிரட்டலில் ஏதேனும் அரசியல் உள்ளதாக அல்லது பக்கத்து நாட்டினர் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து உள்துறை விசாரிக்கும் என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-அக்-202221:36:02 IST Report Abuse
Ramesh Sargam பக்கத்து நாட்டின் (பாகிஸ்தானின்) கட்டளையின் பேரில், உள்நாட்டில் உள்ளவர்கள் இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X