ரூ.11 லட்சம் மதிப்புள்ள காருக்கு, ரூ. 22 லட்சம் ரிப்பேர் சார்ஜ்..! ஷாக் கொடுத்த சர்வீஸ் மையம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
வெள்ளத்தால் சேதமான ரூ.11 லட்சம் மதிப்பிலான காரை, சரிசெய்ய ரூ.22 லட்சம் செலாவாகுமென சர்வீஸ் நிறுவனம், கூறியதால் கார் உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். இது குறித்த அவரது பதிவு இணையத்தில் வைரலாகியது. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அனிருத் கணேஷ். அமேசானில் புராஜெக்ட் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பெய்த கனமழையில் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில்,அவரது
போக்ஸ்வேகன், கார், சர்வீஸ் சென்டர், வைரல், ரூ.22 லட்சம், ரூ.11 லட்சம், பெங்களூர், குரோனி, கேப்பிடலிசம்,


வெள்ளத்தால் சேதமான ரூ.11 லட்சம் மதிப்பிலான காரை, சரிசெய்ய ரூ.22 லட்சம் செலாவாகுமென சர்வீஸ் நிறுவனம், கூறியதால் கார் உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார். இது குறித்த அவரது பதிவு இணையத்தில் வைரலாகியது.கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் அனிருத் கணேஷ். அமேசானில் புராஜெக்ட் மேலாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பெய்த கனமழையில் சாலையில் ஏற்பட்ட வெள்ளத்தில்,அவரது போக்ஸ்வேகன் போலோ கார் மூழ்கியுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள சர்வீஸ் மையத்திற்கு தனது காரை சர்வீஸ் செய்ய அனுப்பியுள்ளார். காரை சரிசெய்ய ரூ.22 லட்சம் செலவாகுமென சர்வீஸ் மையம் மதிப்பீடு செய்து அனுப்பியதை கண்டு அதிர்ந்துள்ளார்.

இது குறித்து அனிருத் கணேஷ் லிங்க்டுஇன் தளத்தில் கூறியிருப்பதாவது:

'இரவு 11 மணிக்கு இடுப்பளவு மழைநீரில் மூழ்கியிருந்த காரை இழுவை இயந்திரம் மூலம் தள்ள வேண்டியிருந்தது. உதவ யாரும் இல்லை. ஆனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களான நாங்கள் கடினமானவர்கள். சரியாக 20 நாட்களுக்கு பிறகு, சர்வீஸ் மையத்தில் இருந்து கார் ரிப்பேரை சரி செய்ய ரூ.22 லட்சம் செலவாகுமென கூறியிருந்தனர்.


latest tamil newsஉண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டதில், கார் சேதத்தை, மொத்த இழப்பாக எழுதி வாங்கி வரும்படி கூறியுள்ளனர். சர்வீஸ் மையத்தில் இருந்து காரை வெளியே எடுத்தவுடன், உரிய தொகை செலுத்தப்படுமென இன்சூரன்ஸ் நிறுவனம் உறுதி கூறியது. ஆனால் அதோடு பிரச்னை முடியவில்லை. சேதம் குறித்த ஆவணங்களை கேட்டதற்கு, ரூ.44,840 கட்டணமாக செலுத்த வேண்டுமென சர்வீஸ் மையம் மற்றுமொரு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதனையடுத்து நடந்த நிகழ்வுகளை, போக்ஸ்வேகனுக்கு இமெயிலில் புகாராக அனுப்பிய பிறகு, சிக்கல் தீர்த்தது. இறுதியாக செப்டம்பர் 26ம் தேதி காரை திரும்ப பெற்றேன். போக்ஸ்வேகன் இந்தியா குழுவினர், இதுபோன்ற சூழ்நிலையில் அதிகபட்ச மதிப்பீடு கட்டணமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்படுமென உறுதியளித்துள்ளனர். இந்த தகவல் அனைவருக்கும் உதவிகரமாக இருக்குமென நம்புகிறேன்.'

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இத்தகைய நடவடிக்கையை "குரோனி" முதலாளித்துவம் என்று அனிருத் விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-அக்-202212:20:28 IST Report Abuse
பாமரன் இது ஒரு சாதாரண நடைமுறைதான்.. total loss அப்பிடின்னு எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது... ஒர்க்க்ஷாப்பில் வச்சிருந்தது தள்ளுக்கூலி எஸ்டிமேஷன் சார்ஜ் எல்லாம் சேர்த்து 44840 வசூலிச்சிருக்காய்ங்க.. எதுவும் தவறாகவோ ஆச்சரியப்படத்தக்க வகையிலோ நடந்ததா தெரியலை... என்னுடைய விபத்தில் சிக்கிய போக்ஸ்வேகன் காருக்கும் இதைத்தான் செய்தேன்.. எனக்கு எந்த நஷ்டமும் வரலை... மேபி சாதாரணமா மேல்நடுத்தற மக்களால் மட்டுமே உபயோகிக்கப்படும் போக்ஸ்வேகன் காரை வச்சிருந்ததால் நம்ம 'நடுத்தர ஆள்' ஷாக்காகிட்டாப்ல போல...
Rate this:
JaiRam - New York,யூ.எஸ்.ஏ
04-அக்-202222:00:18 IST Report Abuse
JaiRamஅந்த காரும் அந்த சர்வீஸ் கொள்ளை சென்டரும் ஆந்திராவை சேர்ந்த ஒரு பிராடு கூட்டத்திற்கு சொந்தமானது....
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-அக்-202210:08:27 IST Report Abuse
Natarajan Ramanathan 2015 வெள்ளத்தில் சேதமான நண்பரின் காருக்கு சென்னையில் ரூ. 6,78,000 எஸ்டிமேட் கொடுத்தார்கள். நண்பர் காரை கோவைக்கு அனுப்பி தெரிந்த செர்வீஸ் சென்டரில் ரூ. 2,50,000 செலவில் சர்வீஸ் செய்துவிட்டார்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
03-அக்-202208:00:37 IST Report Abuse
N Annamalai கொடுமை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X