வழக்கம் போல் அமைதியாக நடந்த ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.,ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. பேரணியில் பா.ஜ.,அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.புதுச்சேரி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம்,மகாத்மா காந்தி மற்றும் வள்ளலார் பிறந்த தினம் முப்பெரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று மாலை 4

புதுச்சேரி:புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.,ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது.latest tamil newsபேரணியில் பா.ஜ.,அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.புதுச்சேரி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் 75-வது சுதந்திர தினம்,மகாத்மா காந்தி மற்றும் வள்ளலார் பிறந்த தினம் முப்பெரும் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி பாலாஜி தியேட்டர் அருகில் உள்ள நாடார் உறவின் முறை சங்க இடத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ்.,சீருடைய அணிவகுப்பு பேரணி துவங்கியது


இதனை செல்வகணபதி எம்.பி.,கொடியசைத்து துவக்கி வைத்தார்.பாரத மாதா சிலை முன்னே செல்ல ஆர்.எஸ்.எஸ்.,தொண்டர்கள் மிடுக்க சீருடையில் அணி வகுத்தனர்.ஆர்.எஸ்.எஸ்., பேரணி பாலாஜி தியேட்டர்,நேரு வீதி,மிஷன் வீதி,புஸ்சி வீதி வழியாக சுதேசி மில் அருகே 4 கி.மீ.,துாரம் சென்று நிறைவடைந்தது.தொடர்ந்து மாலை 6 மணிக்கு அங்கு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பேரணியில் பா.ஜ.,மாநில தலைவர் சாமிநாதன்,அமைச்சர்கள் நமச்சிவாயம்,சாய்சரவணன்குமார்,எம்.எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம்,ரிச்சர்ட்,அசோக்பாபு,சிவசங்கர் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.,சீருடையில் பங்கேற்றனர்.


latest tamil newsமாநில இணை செயலாளர் ராஜசேகர்,முன்னாள் எம்.எல்.ஏ.,இளங்கோ,கோட்ட தலைவர் செல்வராஜ்,மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்.,பேரணியையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devan - Chennai,இந்தியா
04-அக்-202209:21:31 IST Report Abuse
Devan Mr. Mandakasayam whose government told RSS is a terrorist group. Congress whose government has done nothing to this country and who done everything to destroy this country calls RSS is antiindians then we are very proud.
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202218:04:36 IST Report Abuse
venugopal s /////
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202218:04:21 IST Report Abuse
venugopal s ஒரு நூறு பேர் கலந்து கொண்ட ஊர்வலத்துக்கும், பொதுக்கூட்டத்துக்கும் ஆயிரத்தைநூறு போலீஸ் பாதுகாப்பா ? தண்டச்செலவு!
Rate this:
visu - tamilnadu,இந்தியா
05-அக்-202206:52:04 IST Report Abuse
visuஏன் உங்களால கல் எரிய முடியலையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X