குன்னூரில் பெண் கொலை: இருவர் கைது

Added : அக் 02, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
குன்னுார் : உபதலை ஆலோரை கிராமத்தில் பெண் கொலை தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை ஆலோரை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மோசஸ் மனோகரன் என்பவரின் மனைவி ஜோதிமணி, 34. இவர் நேற்று மாலையில் இருந்து காணவில்லை என அருவங்காடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கடைசியாக அருகில் வீட்டில் இருந்த
 குன்னூரில் பெண் கொலை: இருவர் கைது

குன்னுார் : உபதலை ஆலோரை கிராமத்தில் பெண் கொலை தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னுார் உபதலை ஆலோரை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மோசஸ் மனோகரன் என்பவரின் மனைவி ஜோதிமணி, 34. இவர் நேற்று மாலையில் இருந்து காணவில்லை என அருவங்காடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், கடைசியாக அருகில் வீட்டில் இருந்த நிர்மலா எஸ்தரிடம் பேசியது தெரிய வந்தது. அதே நேரத்தில் இவரது கணவர் உட்பட பலரும், தேடி வந்த நிலையில், எஸ்தரின் குடோனாக பயன்படுத்திய குடிசைக்குள், ஜோதிமணி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று, பார்த்த போது, கழுத்து நெரிக்கப்பட்டும், தலையில் காயத்துடனும் இறந்துகிடந்த ஜோதிமணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் முரளீதரன், எஸ்.ஐ., குமார் பொன்னையன் இன்று விசாரணை நடத்தினர்.

இதில், 50 ஆயிரம் ரூபாய் கடனை கேட்க சென்ற ஜோதிமணியை, கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, நிர்மலா எஸ்தர், 30 இவரின் மாமனார் மணி, 75 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிர்மலா எஸ்தரின் கணவர் ஜார்ஜ், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம், வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan_subramanian manian - Manama,பஹ்ரைன்
03-அக்-202211:26:54 IST Report Abuse
rajan_subramanian manian இவர்கள் எல்லோரும் பிற்படுத்தப்பட்ட ஹிந்து நல திட்டங்களை பெறுவதற்காக பாதி பெயர் ஹிந்துவாகவும் தசமபாகம் கொடுக்க கிறிஸ்து பெயரும் வைத்துள்ளனர்.மதம் மாறியவர்களை சலுகைகளை ரத்தஹு செய்தால் ஹிந்துவாக மறுபடி அவதாரம் செய்வார்கள்.
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
03-அக்-202206:28:18 IST Report Abuse
Siva ,,மாட்டு கறி சாப்பிட மதம் மாறிய கும்பல்.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
03-அக்-202205:43:20 IST Report Abuse
a natanasabapathy இவங்களை தான் திராவிட திருட்டு கும்பல் ஆதரிக்கிறது .amen
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X