பெ.நா.பாளையம்:ஆனைகட்டி மலைப்பாதையில் நேற்று காலை அரசு பஸ் எதிர்பாராத விதமாக திடீரென கவிழ்ந்தது. உயிர் சேதம் இல்லை.கோவையிலிருந்து, ஆனைகட்டி நோக்கி நேற்று காலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் கார்த்திகேயன் ஓட்டினார். ஆலமரமேடு பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, திடீரென, 'பிரேக்' பிடிக்காமல் தடுமாறிய பஸ் கவிழ்ந்தது. பஸ்ஸில் பயணம் செய்த மூன்று பேரும் எவ்வித காயமும் இல்லாமல் தப்பினர். 'ரெக்கவரி வேன்' உதவியை கொண்டு பஸ் மீட்கப்பட்டது. இதனால், கோவை - ஆனைகட்டி ரோட்டில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது. தடாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.