ஊராட்சி கிராம சபை கூட்டங்களில்...காரசார விவாதம்! வளர்ச்சிக்கான தீர்மானங்கள் நிறைவேற்றம்

Added : அக் 02, 2022 | |
Advertisement
கிராம சபை கூட்டங்களில் பல்வேறு குறைபாடுகள், புகார்களை முன்வைத்து பல்வேறுஊராட்சிகளில் நேற்று பொதுமக்கள் நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகளிடம் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.காந்திஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி நிர்வாகிகள், அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். வரவு- செலவு கணக்குகள்,
ஊராட்சி கிராம சபை கூட்டங்களில்...காரசார விவாதம்! வளர்ச்சிக்கான தீர்மானங்கள் நிறைவேற்றம்

கிராம சபை கூட்டங்களில் பல்வேறு குறைபாடுகள், புகார்களை முன்வைத்து பல்வேறுஊராட்சிகளில் நேற்று பொதுமக்கள் நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகளிடம் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.காந்திஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி நிர்வாகிகள், அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். வரவு- செலவு கணக்குகள், வளர்ச்சி பணிகள், குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


சூலுார்


சூலுார் வட்டாரத்தில், 17 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது.மழைநீர் சேகரிப்பு, சுகாதார மேம்பாடு, நெகிழி பயன்பாட்டுக்கு தடை, சூரிய மின் சக்தியை பயன்படுத்துதல், பள்ளிகளில் மழைநீரை குடிநீராக மாற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


மேட்டுப்பாளையம்


காரமடை ஊராட்சி ஒன்றியம், மருதுார் ஊராட்சி செல்லப்பனுாரில் கிராம சபை கூட்டம் நடந்தது. பொதுமக்கள் பேசுகையில், 'திம்மம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.செல்லப்பனுார் பகுதியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும். நான்காவது வார்டில் உள்ள ராம் நகர் பகுதியில் சாக்கடை அமைக்க கோரி, பல ஆண்டுகளாக ஊராட்சி தலைவர் மற்றும் சபை கூட்டங்களில் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை', என்று பொதுமக்கள் கேட்ட போது, ஊராட்சித் தலைவர் அதற்கு விளக்கம் அளித்தார். அப்போது தலைவருடன் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.ஊராட்சித் தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் பேசுகையில்,''ராம் நகர் பகுதியில் சாக்கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்ப அனுமதி கிடைத்தவுடன், 16.57 லட்சம் ரூபாய் செலவில் சாக்கடை அமைக்கப்படும். அதேபோன்று ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, மெயின் லைனில் இருந்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்க, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், உடனடியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். கிராம சபை கூட்டத்தில் ஏதேனும் தகராறு ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காரமடை போலீஸ் சப்-- இன்ஸ்பெக்டர் முனுசாமி, தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


அன்னுார்


அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில், குடியிருக்க வீடு வேண்டும் என, 100க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.


பெ.நா., பாளையம்


அசோகபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஸ்ரீராம் நகரில் உள்ள அம்மா பூங்காவில் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், கோவை மாவட்ட நிர்வாகம், அசோகபுரம் ஊராட்சி தலைவர் காசோலையை பயன்படுத்தும் அதிகாரத்தை பறித்தது. இது தொடர்பான விவாதம் அசோகபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் எழுந்தது.கிராமசபைக் கூட்டம் நடந்த பெரும்பாலான ஊராட்சிகளில் வளர்ச்சிக் கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகுதி நீக்கம்!

அசோகபுரம் ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால், தலைவருக்கான காசோலை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. அவரை தகுதி நீக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். விசாரணை நிலுவையில் இருப்பதாக கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கொண்டவர்கள் ஒருவருடன் ஒருவர், காரசாரத்துடன் விவாதித்தனர்.தொடர்ந்து, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், வரவு செலவு கணக்குள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

-நமது நிருபர் குழு -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X