பருவமழை முன்னெச்சரிக்கை அவசியம் பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தல்

Added : அக் 02, 2022 | |
Advertisement
சூலுார்:"சூலுார், இருகூர், கண்ணம்பாளையம் பகுதியில் வாய்க்கால்களை துார் வாரவேண்டும்," என, சூலுாரில் நடந்த பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, பேரிடர் மேலாண்மை குழுவால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சுகுணா தலைமைவகித்தார். சமூக
பருவமழை முன்னெச்சரிக்கை அவசியம்  பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தல்

சூலுார்:"சூலுார், இருகூர், கண்ணம்பாளையம் பகுதியில் வாய்க்கால்களை துார் வாரவேண்டும்," என, சூலுாரில் நடந்த பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, பேரிடர் மேலாண்மை குழுவால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சுகுணா தலைமைவகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், தென்மேற்கு பருவ மழை காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், அதன் தொடர் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.நகராட்சி நிர்வாகம், தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.சூலுார் கக்கன் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் அகற்றவேண்டும். செங்கத்துறை செல்லும் வழியில் உள்ள வாய்க்கால், இருகூர் காமாட்சி புரம் நொய்யல் ஆறு, ஒட்டர்பாளையம் குளத்தில் இருந்து கண்ணம்பாளையம், பாப்பம்பட்டி பிரிவு உள்ள ஓடை துார்வாரப்பட வேண்டும், என, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர்.வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைக்க, அனைத்து சமுதாய நலக்கூடங்களும்,பள்ளிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.கிராமந்தோறும் வி.ஏ.ஓ., தலைமையில் தன்னார்வலர்கள் குழுக்கள், தீயணைப்பு துறையுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது.காய்ச்சல் பரவாமல் இருக்க, சுகாதாரத்துறையினருடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சித்துறையினர் மேற்கொள்ள வேண்டும், என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X