100 முறை ரத்த தானம்: கோவா நபர் சாதனை

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பணஜி : கோவாவைச் சேர்ந்த சுதேஷ் ராமகாந்த், 51, விபத்து போன்ற நெருக்கடியான நேரங்களில், 100 முறை ரத்த தானம் செய்து, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.கோவா மாநிலம் பொண்டா பகுதியைச் சேர்ந்தவர் சுதேஷ் ராமகாந்த். கோவாவில் இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. 'ரத்த மனிதர்' என்று தான், இவரை அனைவரும் பெருமையுடன் கூறுகின்றனர். இவர், தன் 18வது வயதில் முதல் முதலாக ஒருவருக்கு ரத்த
Blood Donate, 100th Donation, Goa, blood man

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பணஜி : கோவாவைச் சேர்ந்த சுதேஷ் ராமகாந்த், 51, விபத்து போன்ற நெருக்கடியான நேரங்களில், 100 முறை ரத்த தானம் செய்து, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.கோவா மாநிலம் பொண்டா பகுதியைச் சேர்ந்தவர் சுதேஷ் ராமகாந்த். கோவாவில் இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. 'ரத்த மனிதர்' என்று தான், இவரை அனைவரும் பெருமையுடன் கூறுகின்றனர். இவர், தன் 18வது வயதில் முதல் முதலாக ஒருவருக்கு ரத்த தானம் கொடுத்து, அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.இதைத் தொடர்ந்து, விபத்தில் சிக்குவோர், அவசர மருத்துவ பிரச்னைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவோர் ஆகியோருக்கு ரத்த தானம் அளித்து வருகிறார்.சமீபத்தில், இவர் 100வது முறையாக ரத்த தானம் செய்து சாதித்துள்ளார்.latest tamil news


இது குறித்து சுதேஷ் கூறியதாவது: எனக்கு 18 வயதாக இருக்கும்போது, ஒருவர் விபத்தில் சிக்கி சாலையில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி அழுது கொண்டிருந்தார். நானும், என் நண்பர்களும் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். விபத்தில் சிக்கியவருக்கு ரத்தம் தேவைப்பட்டதால், உடனடியாக ரத்த தானம் செய்தேன். அதில் அவர் உயிர் பிழைத்தார்.அப்போது தான், ரத்த தானம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்தேன். அப்போதிருந்து, யாருக்கு ரத்தம் தேவைப்பட்டாலும், உடனடியாக சென்று ரத்த தானம் செய்து வருகிறேன். இது எனக்கு ஆத்ம திருப்தியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Gokul Prabu - Coimbatore,இந்தியா
03-அக்-202209:10:02 IST Report Abuse
R Gokul Prabu Great service sir. Just for your kind information, my blood group is A1B-N. One of the rarest group. I have beed donating since my age 18. Now I am running 50. And I have blessed to serve 105 times sofar. I'm from Coimbatore
Rate this:
Cancel
R Gokul Prabu - Coimbatore,இந்தியா
03-அக்-202209:09:36 IST Report Abuse
R Gokul Prabu Great service sir.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X