தேசிய பாதுகாப்பு கவுன்சில் அளிக்கும் தகவல்களில் அலட்சியம் வேண்டாம்!: பிரதமர் உத்தரவு

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | |
Advertisement
புதுடில்லி: தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் பரிந்துரைகள், தகவல் பரிமாற்றங்களை அலட்சியப்படுத்தாமல், அதை அதிக அக்கறையுடன் செயல்படுத்தும்படி அனைத்து அமைச்சர்கள், துறை செயலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறை செயலர்களை அழைத்து,

புதுடில்லி: தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் பரிந்துரைகள், தகவல் பரிமாற்றங்களை அலட்சியப்படுத்தாமல், அதை அதிக அக்கறையுடன் செயல்படுத்தும்படி அனைத்து அமைச்சர்கள், துறை செயலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.latest tamil newsமத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் துறை செயலர்களை அழைத்து, புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி செப்., 30ல் கூட்டம் நடத்தினார். ஐந்து மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் பல முக்கியஅம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிக அக்கறை


அமைச்சர்களும், செயலர்களும் கொள்கைகளை வகுக்கும் போது, அதில் கவனிக்கப்பட வேண்டியமுக்கிய அம்சங்கள் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தி உள்ளார். நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் மற்றும் வர்த்தக துறை செயலர் பி.வி.ஆர்.சுப்ரமணியம் ஆகியோர், தங்கள் துறை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விளக்கினர். அதன்பின், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரியை பேச பிரதமர் அழைத்துள்ளார்.இவரது பேச்சு ஏற்கனவே திட்டமிடப்படாததும், திடீரென பிரதமர் தலையிட்டு அவரை பேச அழைத்ததாகவும் கூறப்படுகிறது.பிரதமர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், என்.எஸ்.சி.எஸ்., எனப்படும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் குறித்து, விக்ரம் மிஸ்ரி அமைச்சர்களிடம் விரிவாக விளக்கி உள்ளார்.உலகெங்கிலும் நடக்கும் மாற்றங்கள் குறித்தும், குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யாவில் நடக்கும் பெரிய மாற்றங்கள் குறித்தும் பேசிய அவர், இவை நம் நாட்டின் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.இதன் பின் பேசிய பிரதமர், 'துறை ரீதியிலான கொள்கைகளை வகுப்பது மிகவும் முக்கியமான பணி; இதை வகுப்பதிலும், நிறைவேற்றுவதிலும் மெத்தனமான போக்கு இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். 'கால மாற்றத்துக்கு ஏற்ப கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். நம் நாட்டின் தனித்தன்மையையும் மனதில் கொள்ள வேண்டும்' என, கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எச்சரிக்கை


மேலும், தான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்தில் வேறொரு மாநிலத்தின் விதிமுறைகளை பின்பற்றி வந்ததாகவும், அதை அவர் சுட்டிக் காட்டிய பின் மாற்றம் செய்யப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல, மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதியில் நாம் வெளிநாடுகளை சார்ந்து இருக்கிறோம்.இது குறித்து, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்து உள்ளது. இதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளிக்கும் பரிந்துரைகள், தகவல் பரிமாற்றங்களை அலட்சியப் படுத்தாமல், அவற்றை கூடுதல் அக்கறையுடன் செயல்படுத்தும்படி, அமைச்சர்கள் மற்றும் செயலர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.


latest tamil newsநாளை துவக்கம்!


ஐ.நா.,வின் உலக புவிசார் தகவல் மாநாட்டை தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் பிரதமர் நரேந்திர மோடி நாளை துவக்கி வைக்கிறார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், 115 நாடுகளைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஒருங்கிணைந்த புவிசார் தகவல் மேலாண்மை, அதன் திறன்கள் மற்றும் திறன்கள் மேம்பாடு தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். நம் கிராமப்புற சமூகங்களை புவிசார் சேவைகளுடன் இணைப்பது குறித்து மத்திய அரசு தரப்பில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X