'ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தடை செய்ய முடியாது'

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை:''ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் நாட்டின் பாதுகாப்புக்காக, தேச பக்தி உடைய தொண்டர்களால் செயல்பட்டு வரும் இயக்கம். இந்த இயக்கத்தை எந்த ஒரு தனி மனிதனாலும் தடை செய்ய முடியாது,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துஉள்ளார். மஹாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி

சென்னை:''ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் நாட்டின் பாதுகாப்புக்காக, தேச பக்தி உடைய தொண்டர்களால் செயல்பட்டு வரும் இயக்கம். இந்த இயக்கத்தை எந்த ஒரு தனி மனிதனாலும் தடை செய்ய முடியாது,'' என, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துஉள்ளார்.



latest tamil news



மஹாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திலும், காமராஜர் நினைவிடத்திலும், மலர் துாவி மரியாதை செலுத்திய பின் அவர் அளித்த பேட்டி:


இந்தியா 100வது சுதந்திர தினத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக மாற, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காமராஜர் ஆட்சி காலம், தமிழக ஏழை, எளிய மக்களின் பொற்காலமாக இருந்தது. அப்போது தான், தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுதும் காதி பொருட்களை ஊக்கவிக்கக் கூடிய நிகழ்ச்சி நடந்து வருகிறது.


மக்கள் காதி பொருட்களை வாங்கி, அதை ஊக்கப்படுத்த வேண்டும்.காந்தியடிகள் சுத்தத்தை போற்றியவர்; அவர் வழியில், துாய்மை பாரத திட்டம் வாயிலாக, ஆறு ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம்.ஆர்.எஸ்.எஸ்., இன்று, நேற்று வந்த அமைப்பு இல்லை.


100வது ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கக் கூடிய ஒரு அமைப்பு. ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் தேசபக்தி உடைய இயக்கம்; நாட்டுக்கு சேவை செய்யக் கூடிய இயக்கம்.பல லட்சம் தொண்டர்கள் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இயக்கம்; நாட்டின் பாதுகாப்புக்காக செயல்பட்டு வரும் இயக்கம். இந்த இயக்கத்தை நேரு தடை செய்ய பார்த்தார்; இயலவில்லை.


latest tamil news


இந்த இயக்கத்தை எந்த ஒரு தனி மனிதனாலும் தடை செய்ய முடியாது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் சட்டத்துக்கும், நீதிக்கும், தர்மத்துக்கும் கட்டுப்பட்டது; சட்டம் என்ன சொல்கிறதோ; அதன்படி செயல்படும்.இவ்வாறு முருகன் கூறினார்.இதையடுத்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள காதிபவனுக்கு சென்ற அமைச்சர் முருகன், 'அனைவரும் காதி துணிகள், பொருட்களை வாங்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
03-அக்-202211:50:23 IST Report Abuse
Paraman வெளிநாட்டு வந்தேறிகளுக்கும், வெளிநாட்டு மத விருந்தாளிகளுக்கும் பிறந்த அநாகரீக கும்பலால் தொடங்கப்பட்டு அந்த கூட்டத்தினர் மட்டுமே உறுப்பினர்களாகவும் தொண்டர்களாகவும் இருக்கும் திராவிட கும்பலுக்கு உண்மையான 'தேசபக்தி', 'தெய்வபக்தி', 'கலாசார பண்பாடு', 'கற்புடமை' போன்ற நன்னெறிகளை கேட்டால் அவர்களின் இழி உடம்பு முழுவதும் நெறி கட்டிக்கொண்டு விடும் .
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
03-அக்-202215:08:58 IST Report Abuse
Rajஏண்டா ... உன் குடும்ப பிறப்பு ரக்ஷியத்தையெல்லாம் பொதுவெளியில் சொல்லுற.......
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
03-அக்-202211:39:32 IST Report Abuse
jayvee தமிழகத்தில் உடனடியாக தடை செய்யப்படவேண்டிய முதல் தீவிரவாத இயக்கம், திராவிடர் கழகம்..
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
03-அக்-202210:46:18 IST Report Abuse
தஞ்சை மன்னர் "" நாட்டுக்கு சேவை செய்யக் கூடிய இயக்கம்.பல லட்சம் தொண்டர்கள் ""
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X