கிராம சபை கூட்டத்தில் 'கம்பி' நீட்டிய அமைச்சர் பொன்முடி

Added : அக் 03, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கூட்டம் முடிவதற்கு முன், வேறு கிராம சபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி, அமைச்சர் பாதியிலேயே நழுவினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம்,
gram sabha,ponmudi,dmk,minister,gram sabha meeting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கூட்டம் முடிவதற்கு முன், வேறு கிராம சபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறி, அமைச்சர் பாதியிலேயே நழுவினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியில், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.



அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, 'நான் ஒரு ஒன்றிய கவுன்சிலர். இந்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறதா; இல்லையா? கிராமத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் என்னிடம் தகவல் சொல்வதில்லை. எந்த வேலையும் எனக்கு கொடுப்பதில்லை' என்றார்.


latest tamil news



இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, 'ஊராட்சி தலைவருக்கும், ஒன்றிய கவுன்சிலருக்குமான பிரச்னை இது. கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க முடியாது. 'பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை பற்றி பேசட்டும். நீங்கள் அமருங்கள்' எனக்கூறி, 'பொதுவான குறைகள் இருந்தால் கூறுங்கள்' என, பொதுமக்களை பார்த்து கேட்டார்.



குடிநீர், 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, பதில் கூறுமாறு அமைச்சர் கூறினார்.


latest tamil news



தொடர்ந்து பேசிய அமைச்சர், 'பக்கத்து கிராமமான ஆதிச்சனுாரில் நிகழ்ச்சி இருப்பதால் அங்கு செல்கிறேன், நிகழ்ச்சியை அதிகாரிகள் தொடர்ந்து நடத்துவர்' எனக் கூறி, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
03-அக்-202213:03:51 IST Report Abuse
சீனி இன்று நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு பாதியில் டிமிக்கி கொடுத்ததால், மக்கள் காசில் வாங்கிய அந்த ஓசி காரும், பெட்ரோலும், சம்பளமும் வீணாகிவிட்டது. திமுக திருப்பி கருவூலத்தில் செலுத்துமா ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-அக்-202213:03:51 IST Report Abuse
duruvasar இவர் எந்த பிரிவில் முனைவர் பட்டம் வாங்கினார் ? ஆனால் ஒன்று இரட்டை முனைவர் பட்டம் பெற்றவர் போல் இல்லாமல் ஒரு முனைவர் பட்டதிற்கு தேவையான அளவுக்கு தான் தன்னுடைய செயற்பாடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறார் . .
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
03-அக்-202212:03:53 IST Report Abuse
vadivelu நன்றாக படித்து நல்ல குடும்ப பின்புலத்தில் வளர்ந்த அரசியலவாதிகள் , கிடைக்கும் சந்தர்ப்பங்களில் , அந்த ஒரு சாதி மேல் வெறுப்பு, யாரோ வணங்கும் கடவுளை பொதுவில் விமரிசித்து வெறுப்பது,ஏழை மக்களை துச்சமாக மதித்து ஏசுதல்,பெரும் பதவியில் இருக்கும் அதிகாரிகளை ஒருமையில் கடிந்து கொள்வது, பெருவாரி மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட அரசியல்வாதியை அவரின் பதவியை கனவில் கூட எட்ட முடியாதவராக இருந்தும் ஏளனமாக பேசுதல் . தவறு என்று நினைக்கிறேன்.ஏன் தமிழகம் இந்த நிலைக்கு வந்து விட்டது,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X