இது உங்கள் இடம்: பச்சோந்தி திருமாவை ஓரங்கட்டுங்கள்!

Added : அக் 03, 2022 | கருத்துகள் (70) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழகத்தில், காந்தி ஜெயந்தி தினமான நேற்று, 50இடங்களில் பேரணி நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு திட்டமிட்டு இருந்தது. இதற்கு, விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.ஆனால்,
Thirumavalavan, VCK, Thiruma,Viduthalai Chiruthaigal Katchi, Thol Thirumavalavan, திருமாவளவன், தொல் திருமாவளவன், பச்சோந்தி, திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


எஸ்.ராமகிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழகத்தில், காந்தி ஜெயந்தி தினமான நேற்று, 50இடங்களில் பேரணி நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு திட்டமிட்டு இருந்தது. இதற்கு, விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு தடை கோரி நீதிமன்றம் சென்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடைபெற்றால், வன்முறை நிகழும்' என்று தெரிவித்தார். அது மட்டுமின்றி, அதே நாளில், தங்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதச் சங்கிலி நடத்தும் என்றும் அறிவித்தார்.இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரலாம் என்பதால், ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கும், வன்முறைக்கும் என்றுமே தொடர்பு இருந்தது கிடையாது. ஜாதி, மத வெறியை மக்களிடையே துாண்டி, அரசியல் ஆதாயம் அடைந்து வரும் திருமாவளவனின் கட்சியினர் தான், பல நேரங்களில் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதை, தமிழக மக்கள் நன்கறிவர். தி.மு.க.,வின் வால் நுனியை பிடித்துக் கொண்டு தொங்கும் இவருக்கென, தனி லட்சணையும் கிடையாது; லட்சியமும் கிடையாது.தேர்தல் சமயத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, அறிவாலயத்தின் வாசலில் நிற்பார்.ஒரு சீட்டோ, ரெண்டு சீட்டோ கிடைக்கும்... அவ்வளவு தான். இவரை தலைவராக ஏற்ற பட்டியலின மக்கள், இதுவரை எந்தப் பலனும் அடைந்ததில்லை... பாவம்! பட்டியல் இன மக்களின் காவலன் என தன்னை பீற்றிக் கொள்ளும் திருமா, தி.மு.க.,வின் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி, ராஜ கண்ணப்பன், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றவர்கள், பட்டியலினத்தவரை அவமானப்படுத்திய போது வாயே திறக்கவில்லை; குறைந்தபட்சமாக கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.


latest tamil newsஅப்படி கண்டனம் தெரிவித்தால், அடுத்த தேர்தலில், 'சீட்' என்ற பிச்சை தி.மு.க.,விடம் இருந்து கிடைக்காது என்ற பயம். தேர்தல் சலுகை பெறுவதற்காக, ஒரு முகத்தை ஹிந்துவாகவும், மற்றொரு முகத்தை கிறிஸ்துவர் ஆகவும் மாற்றி மாற்றி காட்டும் கிறிப்டோ கிறிஸ்டியன் இவர். ஹிந்து சனாதன தர்மத்தின் வேரை அறுப்பதாக சொல்லித் திரியும் இவருக்கு, அதன் வேர் எங்கே இருக்கிறது என்று அறியவே பல பிறவிகள் தேவை.என்ன தான் இவர், தி.மு.க.,விற்கு துதி பாடினாலும், இவருக்கு கிடைப்பது என்னவோ 'பிளாஸ்டிக் சேர்' தான். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதான கொள்கை என்னவென்றால், 'அடங்க மறு, அத்து மீறு, திமிரி எழுவோம், திருப்பி அடிப்போம், வாள் கை மாறினால் வாழ்க்கை மாறும்' போன்றவை தான்.ஆனால், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அப்படிப்பட்டதல்ல. தேசியத்திற்கும், தெய்வீகத்திற்கும் தன்னை அர்ப்பணித்த இயக்கம்.எனவே, தமிழக அடித்தட்டு மக்களே, திருமா போன்ற பச்சோந்திகளை இனம் கண்டு ஒதுக்குங்கள். அப்போது தான், மாநிலமும் முன்னேறும்; நீங்களும் முன்னேறுவீர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ELANGOVAN - Coimbatore ,இந்தியா
04-அக்-202217:40:05 IST Report Abuse
ELANGOVAN திருமா இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த போது அவர் கட்சியினர் தீ வைத்த பஸ்ஸில் உயிர் தப்பியவர்களில் நானும் ஒருவன். காந்தி ஜெயந்தியன்று மனித சங்கிலி போராட்டம் நடத்த திருமா ஐயாவுக்கு மற்றும் தான் தகுதி இருக்கிறது.
Rate this:
Cancel
Vengadesan - Thanjavur ,இந்தியா
04-அக்-202212:13:00 IST Report Abuse
Vengadesan உங்களுக்காக பாடுபடுகிறது தலைவரின் தலை விதி அவர் நினைத்து இருந்தால் எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கலாம்.அவரை புகழவில்லை என்றாலும் அவரை விமர்சனங்களை தவிர்த்து கொள்ளுங்கள்
Rate this:
Cancel
Premkumar - Chennai ,இந்தியா
04-அக்-202209:24:37 IST Report Abuse
Premkumar வடகிழக்கு மாநிலங்களில் BJP என்றால் பாரதிய ஜீஸஸ் பார்ட்டி என எளிய கிறிஸ்தவ மக்களிடம் பொய் சொல்லி ஓட்டு வாங்கிய கதையும் எங்களுக்கு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X