தனியார் மயத்தை கண்டித்து போராடிய மின்துறை ஊழியர்கள் 700 பேர் நள்ளிரவில் கைது

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுச்சேரி-தனியார் மயமாக்கலை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மின் துறை ஊழியர்கள் 700 நேற்று நள்ளிரவு துணை ராணுவனத்தினரின் உதவியோடு அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் உத்தரவுஇந்நிலையில் நேற்று

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி-தனியார் மயமாக்கலை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மின் துறை ஊழியர்கள் 700 நேற்று நள்ளிரவு துணை ராணுவனத்தினரின் உதவியோடு அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



latest tamil news




அமைச்சர் உத்தரவு

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை துணை மின் நிலையங்களில் புகுந்து பியூஸ் கேரியரை பிடுங்கியதால், மாநிலம் இருளில் மூழ்கியது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.


வழக்கு பதிவு

அதன்பேரில், துணைமின்நிலையங்களில் புகுந்து மின் தடை ஏற்படுத்தியது தொட்பாக, முதலியார்பேட்டை, டி.நகர் உள்ளிட்ட அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


அடையாளம் தெரிந்தது

அதில் மின்தடை ஏற்படுத்தியது தொடர்பாக மின்துறை ஊழியர்கள் 29 பேரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர்கள் நேற்று மின்துறை தலைமை அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்களை கைது செய்ய போலீசார் மின்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்று, மின்தடை செய்த ஊழியர்களை கைது செய்ய முயன்றனர்.


இரவில் தொடர்ந்த போராட்டம்

உடன் அங்கிருந்த சக ஊழியர்கள் போலீசாரை தடுத்து நிறுத்தி வாககுவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது. சீனியர் எஸ்.பி., பேச்சுவார்த்தை நடத்தியும், மின்துறை ஊழியர்கள் கைதாகவில்லை.வழக்கமாக தினமும் போராட்டம் நடத்திவிட்டு, கலைந்து செல்லும் மின் ஊழியர்கள், நேற்று போலீசார் கைது செய்ய வந்ததை தொடர்ந்து மாலை யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. தலைமை அலுவலக வளாகத்திலேயே தங்கி சமைத்து இரவு சாப்பிட்டுவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். மத்திய அரசின் துணை ராணுவப்படையை சேர்ந்த அதிவிரைவு அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.


நிர்வாகிகள் வருகை

இரவு 9 மணிக்கு அங்கு வந்த அகில இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு தலைவர் சைலந்தர் துபே, துணை தலைவர் ஜெயந்தி, தேசிய மின்சார பொறியாளர் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் நந்தி சவுத்திரி, இந்திய மின் ஊழியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் சுப்ரமணி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் துணை பொதுச் செயலாளர் ரவிந்திரன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் போராட்டம் நடத்திய ஊழியர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.தொடர்ந்து அகில இந்திய மின் பொறியாளர் கூட்டமைப்பு துணை தலைவர் ஜெயந்தி கூறுகையில், மின் துறையை தனியார் மயமாக்குவது சரியல்ல. இது குறித்து நாளை (இன்று) முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்த பேச உள்ளோம். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.புதுச்சேரி மின் துறை ஊழியர்களின் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் பிற மாநில மின் துறை பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் என்றார்.


துணை தாசில்தார் எச்சரிக்கை

இந்நிலையில் இரவு 10:30 மணிக்கு அங்கு வந்த துணை தாசில்தார் பாலமுருகன், ஒலிபெருக்கி மூலம் இங்கு போராட்டம் நடத்துவது சட்ட விரோதம். 10 நிமிடங்களில் கலைந்து செல்ல வேண்டும். தவறினால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், போராட்டக்குழுவினர் எவரும் கலைந்து செல்லவில்லை.


latest tamil news



அதிரடி கைது

அதனைத் தொடர்ந்து இரவு 10:50 மணிக்கு போலீசார், மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படையினரும், அதிரடியாக மின்துறை அலுவலக கேட்டை திறந்து, மின் துறை ஊழியர்களை கைது செய்ய முயன்றனர். உடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தாங்களாகவே கைதாகினர். அவர்களை போலீசார், கோரிமேட்டில் உள்ள போலீஸ் சமுதாயக்கூடத்திற்கு அழைத்து சென்றனர்.

பதியப்பட்ட வழக்கு விபரம்

புதுச்சேரி, மரப்பாலம் துணை மின் நிலையத்தில் அத்துமீறி மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள் மீது 143 - சட்டவிரோதமாக கூடுதல், 353 - அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், 448 - அத்துமீறி நுழைதல், 149 - கும்பலாக கூடி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-அக்-202201:19:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லஞ்சம் கேட்டால் அரசு ஊழியர். லஞ்சத்தை சட்டமாக்கி அடிச்சி கேட்டா, அது தனியார்.
Rate this:
Cancel
C G MAGESH - CHENNAI,இந்தியா
03-அக்-202215:12:26 IST Report Abuse
C G MAGESH ஜெயலலிதாவை போல போராடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
03-அக்-202215:34:42 IST Report Abuse
விசு அய்யர்அவர் ஊழல் குற்றவாளி.. அவருக்கு கமிஷன் கிடைக்கவில்லை என்றால் அப்படி தானே செய்ய முடியும்....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
03-அக்-202212:23:54 IST Report Abuse
தமிழ்வேள் இந்த போராட்ட கும்பலின் கண்முன்பு , இவர்களுடைய தொழிற்சங்க தலைவர் , செயல்பாட்டாளர்களை , அடக்குவது ஒன்றுதான் வழி ....[இன்னொரு வழியும் உண்டு ..பதிவு செய்தால் -தினமலர் பிரசுரம் செய்யாது ...]
Rate this:
விசு அய்யர் - Chennai ,இந்தியா
03-அக்-202215:18:14 IST Report Abuse
விசு அய்யர். ஆம் செய்வதில்லை.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X