எரிபொருள், பேட்டரி தீர்ந்ததால் விடைபெற்றது 'மங்கள்யான்'

Added : அக் 03, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
பெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த 'மங்கள்யான்' செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' தயாரித்த மங்கள்யான் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.சி., 25 ராக்கெட் வாயிலாக
Mars Orbiter Mission, Mangalyaan, ISRO, இஸ்ரோ, மங்கள்யான், செயற்கைக்கோள், செவ்வாய் கிரகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பெங்களூரு : செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த 'மங்கள்யான்' செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்ததை அடுத்து, அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' தயாரித்த மங்கள்யான் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.சி., 25 ராக்கெட் வாயிலாக 2013 நவ., 5ல் விண்ணில் ஏவப்பட்டது. 2014 செப்., 24ல் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் இணைந்தது.இந்த திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.latest tamil news

கடந்த எட்டு ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மங்கள்யான் செயற்கைக்கோளின் எரிபொருள் மற்றும் பேட்டரி முழுதுமாக தீர்ந்துவிட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மங்கள்யான் தன் எட்டாண்டு கால பயணத்தை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இஸ்ரோ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே இயங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் எதிர்பார்த்ததை விட அதிக காலம் உழைத்து பல பயனுள்ள தகவல்களை நமக்கு அளித்துள்ளதாக இஸ்ரோ அதிகாரி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (18)

THANGARAJ - CHENNAI,இந்தியா
03-அக்-202214:09:12 IST Report Abuse
THANGARAJ சோலார் பேனல் இருக்கு, பூமிக்கு மேல் மற்றும் செவ்வாய் சுற்று வட்ட பாதையில் இருப்பதால் அங்கு இரவு என ஒன்று இல்லை, சூரிய ஒளி எப்போதும் கிடைக்கும், எனினும் எலக்ட்ரானிக் சிஸ்டம் வேலை செய்ய பேட்டரி மின்சாரம் (volt) ரெகுலேஷன் (மூலம்) வேலை செய்து கொண்டு இருக்கும், தற்போது Battery performance குறைந்து கொண்டே வருவதினால் ஒரு கால கட்டத்தில் மின்சாரம் சேமிக்கும் திறன், அளவு குறைந்து கொண்டு வருவதால், செயற்கைகோள் தவறான சிக்னல் வேகமற்ற பயணம் ஏற்படும். ஆதலால் அதை வெடிக்கவோ அல்லது கைவிடவோ செய்வார்கள் என நினைக்கிறன். நன்றி.
Rate this:
Cancel
03-அக்-202210:32:00 IST Report Abuse
அப்புசாமி சீன பேட்டரிகளாய் இருக்குமோ..
Rate this:
Cancel
03-அக்-202210:28:08 IST Report Abuse
ஆரூர் ரங் பேட்டரி தானே ? பேட்டரிவாளன் கிட்ட சொன்னா 😇வாங்கிக் கொண்டு போய் வெச்சிட்டு வந்துருவானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X