ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து: உளவுத்துறை எச்சரிக்கை

Added : அக் 03, 2022 | கருத்துகள் (40) | |
Advertisement
சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' உட்பட எட்டு அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,
RSS, Tamil Nadu, Kerala, ஆர்எஸ்எஸ், தமிழகம், கேரளா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' உட்பட எட்டு அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு, அலுவலங்கள் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர்.



latest tamil news


இந்நிலையில், தமிழகத்தில் ஐந்து, கேரளாவில் நான்கு என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு, பயங்கரவாதிகள் குறி வைத்து இருப்பதாக, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்களுக்கு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளது. அந்த ஒன்பது பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை, மாநில அரசுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இதையடுத்து, தமிழகம் மற்றும் கேரளாவில், சம்பந்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., முக்கிய நிர்வாகிகள் போலீஸ் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். தமிழகத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நவம்பர் 6ல் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதன் முக்கிய நிர்வாகிகளுக்கு மிரட்டல் வந்திருப்பது, போலீசாரை உஷாராக இருக்கச் செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.M.Raja - Salem,இந்தியா
04-அக்-202222:25:31 IST Report Abuse
S.M.Raja இப்படியே சும்மா இருக்கிற இந்து மக்கள சீண்டி சீண்டியே பாஜகலியோ ஆர்எஸ்எஸ் லயோலா போயி சேர வச்சிருவாங்க...
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
03-அக்-202216:38:51 IST Report Abuse
sankar மகாத்மாவை கொன்ற பாவத்தை அனுபவிக்கணும்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
03-அக்-202214:28:19 IST Report Abuse
வெகுளி என்ன செய்தால் ஆட்சி கவிழும் என்று திமுகவுக்கு நன்கு தெரியும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X