வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில், செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது; இது, கடந்தாண்டு செப்டம்பரை ஒப்பிடுகையில் 10 சதவீதம் வளர்ச்சியாகும்.
இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மாதம் தோறும் ஜி.எஸ்.டி., வரி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்., மாத ஜி.எஸ்.டி., வருவாயும் வளர்ச்சி அடைந்துள்ளது.செப்டம்பரில் ஜி.எஸ்.டி.,வருவாய் 8,637 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது, 2021 செப்டம்பரில் வசூலான 7,842 கோடி ரூபாயை விட 10 சதவீதம் அதிகம்.
![]()
|
ஜி.எஸ்.டி., வருவாய் வசூலில், தமிழகம் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரியில், செப்டம்பர் வரி வருவாய் 160 கோடியில் இருந்து, 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 188 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.