வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சூலுார் : ''இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அனைத்து இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும்,'' என, ராஷ்ட்ரீய சுரக் ஷாமஹா மிஷன் தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி மஹராஜ் கூறினார்.
ராஷ்டிரீய சுரக் ஷா மஹா மிஷன் தலைவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான ராம் விலாஸ் வேதாந்தி மஹராஜ், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, செலம்பராயம்பாளையத்தில் நடந்த கோமாதா பூஜையில் பங்கேற்றார். இயக்கத்தின் தேசிய பொதுச் செயலர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மணி முன்னிலை வகித்தார்.
![]()
|
கோமாதா மற்றும்அஸ்வ பூஜை செய்து, பக்தர்களுக்கு வேதாந்தி மஹராஜ் ஆசி வழங்கினார். அவர் கூறியதாவது: நாட்டில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அனைத்து மதத்தினரையும் சமமாக ஏற்றுக் கொள்கிறோம். இந்த ஒற்றுமையை பிளவுபடுத்த சில சக்திகள் வேலை செய்கின்றன. அவர்கள் ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
இந்தியாவுக்கும், அதன் இறையாண்மைக்கும் எதிராக செயல்படும் இயக்கங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.காங்., - எம்.பி., ராகுலின் நடைபயணம் வெற்று விளம்பரம். காங்., கட்சி, மக்கள் மத்தியில் மதிப்பை இழந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.