பழநி மலைக்கோவிலுக்கு நாளை மதியம் வரை அனுமதி

Added : அக் 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
பழநி: பழநி மலை கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை மதியம் 12:00 மணி வரை மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பழநி மலைக்கோவிலில் செப்., 26 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா துவங்கியது. நாளை அக்., 4ல் உச்சிகால பூஜை மதியம் 12:00 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு கட்டண சீட்டுகள் வழங்குவது
Palani, Murugan, Navratri,பழநி, முருகன், நவராத்திரி, முத்துகுமாரசுவாமி, பெரிய நாயகி அம்மன் கோவில்,  Muthukumaraswamy, Periyayaki Amman Temple,

பழநி: பழநி மலை கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை மதியம் 12:00 மணி வரை மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பழநி மலைக்கோவிலில் செப்., 26 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா துவங்கியது. நாளை அக்., 4ல் உச்சிகால பூஜை மதியம் 12:00 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். மதியம் 2:45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு மலைக்கோவில் சன்னதி திருக்காப்பிடப்படும். பீச் ரோடு, படிப் பாதை வழியாக மதியம் 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.



பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து வேலுடன் தங்க குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி எழுந்தருளி கோதைமங்களத்தில் அம்பு போடுதல் மகிசாசூரன் வதம் நடைபெறும். பின் பராசக்தி வேலுக்கு அர்த்த சாம பூஜை நடைபெறும்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன் செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
03-அக்-202209:59:37 IST Report Abuse
Chakkaravarthi Sk பீச் ரோடு பழனியில் உள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X