கே.வி., பள்ளியில் எல்.கே.ஜி., துவக்கம்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு

Added : அக் 03, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், முதல் முறையாக கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்கான அட்மிஷனை கே.வி., பள்ளி அறிவித்துள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கே.வி., பள்ளிகள் நாடு முழுதும் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே
KV school, LKG, kindergarten

சென்னை : மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், முதல் முறையாக கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்கான அட்மிஷனை கே.வி., பள்ளி அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கே.வி., பள்ளிகள் நாடு முழுதும் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. மத்திய, மாநில அரசு பணியாளர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, கே.வி., பள்ளிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலியிடங்கள் இருந்தால், பொது தரப்பினர் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.



இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே, கே.வி., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாக இருந்த குறைந்த பட்ச வயது, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள், 'பால்வாடிகா' என்ற பெயரில், கே.வி., பள்ளியில் துவங்கப்படுகின்றன.



இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள கே.வி., பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ளார்.அதன் விபரம்:பால்வாடிகா முதல் பிரிவில், 3 முதல் 4 வயது வரையிலும்; பால்வாடிகா இரண்டாம் பிரிவில், 3 வயது முதல் 5 வயது வரையிலும்; பால்வாடிகா மூன்றாம் பிரிவில், 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பங்களை, https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம்.



கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் 10ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பதிவுகள் நடக்கும்.பாலவாடிகா ஒன்றாம் பிரிவில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.கூடுதல் வகுப்புகளுக்கு, 73051 60907, 971058 8122 என்ற எண்களில், ஐ.ஐ.டி.,யில் உள்ள கே.வி., பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Arunachalam - TRICHY,இந்தியா
03-அக்-202210:35:47 IST Report Abuse
Natarajan Arunachalam கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப் பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X