போரூரில் முளைத்துள்ள விளம்பர 'பேனர்'கள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
போரூர்: வளசரவாக்கம் மண்டலம், போரூர் மேம்பாலத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் முளைத்துள்ள விளம்பர 'பேனர்'களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்படும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள்

போரூர்: வளசரவாக்கம் மண்டலம், போரூர் மேம்பாலத்தை சுற்றி உள்ள கட்டடங்களில் முளைத்துள்ள விளம்பர 'பேனர்'களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்படும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தன.latest tamil news
இதனால், சற்று குறைந்திருந்த விளம்பர பேனர் கலாசாரம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்து உள்ளன.

சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட, போரூர் மேம்பாலத்தை சுற்றி உள்ள கட்டடங்களில், அதிகளவில் ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. புயல் மழை காலங்களில், இந்த விளம்பர பேனர்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்று அப்பகுதியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்களின் தடை உத்தரவையும் மீறி, விளம்பர பலகை வைக்க அரசியல்வாதிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sugumar s - CHENNAI,இந்தியா
03-அக்-202218:27:07 IST Report Abuse
sugumar s கண்டு கொண்டதால் கண்டு கொள்ளவில்லை
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
03-அக்-202212:07:17 IST Report Abuse
madhavan rajan திராவிட மாடலை ஆதரிக்கும் தமிழகம் நீதிமன்றத்தின் ஆணைகளை இந்த மாடல் அரசு நிறைவேற்றாது என்பதுகூட தெரியாமலா இருக்கிறது.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
03-அக்-202211:34:35 IST Report Abuse
Rengaraj ரோட்டில் சென்டர் மீடீயன் போடுவதே பாதுக்காப்பான பயணத்துகாகத்தான். ஆனால் அதில் கட்சி போஸ்டர் , கல்யாண போஸ்டர், இறுதி அஞ்சலி போஸ்டர் , சினிமா போஸ்டர் என்று சகட்டு மேனிக்கு ஓட்டுகிறார்கள். பேனர் வைக்கிறார்கள். அதை நெடுஞ்சாலை அதிகாரிகளோ , சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. அரசியல் போஸ்டர் என்றால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு அபராதம், கல்யாண வீடு போஸ்டர் என்றால் சம்பந்தப்பட்ட மணமகன் அல்லது மணமகள் இவர்களுக்கு அபராதம் இப்படி தொடர்புடையவர்களுக்கு அபராதம் போடுமாறு சட்டம் இருக்க வேண்டும். ஹெல்மெட் போடவில்லை என்றால் அபராதம் போடுகிறார்கள். கேட்டால் நமது பாதுகாப்புக்கு என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி போஸ்டர், பேனர் வைத்தால் பாதசாரிகளுக்கும், வண்டி ஓட்டுவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்குமா ? செல்போன் கேட்டுக்கொண்டு ஓட்டினால் கவனப்பிசகு ஏற்பட்டு விபத்து நேரிடலாம் என்று அபராதம் விதிக்கின்றனர். இந்த மாதிரி போஸ்டர் பேனர் வைத்தால் பயணம் பாதுகாப்பாக இருக்குமா ? என்ன நிர்வாகமோ ? என்ன சட்டமோ ? அதிகாரிகளின் அலட்சியம் நிர்வாகத்தில் தலைமை சரியில்லை என்றே சொல்ல வேண்டும். நாடு எப்படி போனால் எனக்கென்ன என்ற மனோபாவம் இவர்களுக்கு இருக்கிற வரையில் எப்படி கடமை உணர்வுடன் சேவை ஆற்றுவார்கள். ? போக்குவரத்து சம்பந்தமாக இருக்கின்ற சட்டத்தை ஒழுங்காக அமல்படுத்தினால் விபத்துகள் நிகழ்வது மிகவும் குறையும். போலீஸ்காரர்களின் கடமையை செய்யவிடாமல் யார் தடுக்கிறார்கள் என்பது உயர் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X