மதுரை : மதுரை வடக்கு வெளிவீதியில் 'தினமலர்' நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகர் கிளை பொதுச் செயலாளர் பாபு வரவேற்றார். தலைவர் கணபதி வரதசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அமுதன், துணை பொதுச் செயலாளர் பக்தவத்சலம் முன்னிலை வகித்தனர். நகர்க்கிளை பொருளாளர் ராமகிருஷ்ணன், மதுரைக் கல்லுாரி வாரிய பொருளாளர் ஆனந்த சீனிவாசன் உடனிருந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் புத்தாடைகள் வழங்கி, பேசியதாவது: தினமலர் நாளிதழ் தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக வெளியாகி வருகிறது. உலகளவில் நேர்மையாக செய்தி வெளியிடும் ஒரே நாளிதழ். இப்படிப்பட்ட நிறுவனம் உருவாக காரணமாக இருந்தவர் டி.வி.ராமசுப்பையர். 'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற கவிஞர் வாலியின் வரிகளை போல் நம் மனதில் இன்றும் இடம் பிடித்துள்ளார். இன்று தமிழக சுற்றுலா துறைக்கு 18 சதவீதத்திற்கு மேல் வருமானம் கன்னியாகுமரி மாவட்டம் மூலம் வருகிறது.
அம்மாவட்டம் தமிழகத்துடன் இணைய பெரும் பாடுபட்டவர் டி.வி.ராமசுப்பையர். அத்தகைய மனிதரை பெருமைப்படுத்துவது நம் கடமை. டி.வி.ஆர்., காட்டிய நல்வழியில் அவரது குடும்பத்தார், தினமலர் நாளிதழை சிறப்பாக நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பேசினார்.* மதுரை நியூ தென் மதுரை செல்போன் ரிப்பேர் அசோசியேஷன் சார்பில் டி.வி.ஆர்., உருவசிலைக்கு தலைவர் முத்துசாமி மரியாதை செலுத்தினார். பொருளாளர் சிவா, செயலாளர் பாண்டியராஜன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், அப்துல் ரஷிம், காசி விஸ்வநாதன், கவுதம், ராம் பங்கேற்றனர்.* மதுரை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் மயில்.மூலப்பொருள், பொன்சங்கர், சேகர், அப்துல் ரஷிம், பாண்டியராஜன், மகாராஜன், சிவா, சண்முக பிரகாஷ், கவுதம், முத்துச்சாமி, காசி விஸ்வநாதன், ஓம்குமார் கலந்து கொண்டனர்.