கண்ணீரில் கவுரவ விரிவுரையாளர்கள்: தந்தை உத்தரவை காப்பாற்றுவாரா ஸ்டாலின்

Added : அக் 03, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
மதுரை : தமிழக அரசுக் கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் யு.ஜி.சி., தகுதி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் அ.தி.மு.க.,- தி.மு.க., என இரண்டு ஆட்சிகளிலும் முரண்பட்ட உத்தரவுகளால் 12 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேள்விக்குறியாகி கண்ணீர் வடிக்கின்றனர்.அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக
DMK, MK Stalin, Stalin, ஸ்டாலின், கவுரவ விரிவுரையாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை : தமிழக அரசுக் கலைக் கல்லுாரிகளில் பணியாற்றும் யு.ஜி.சி., தகுதி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் அ.தி.மு.க.,- தி.மு.க., என இரண்டு ஆட்சிகளிலும் முரண்பட்ட உத்தரவுகளால் 12 ஆண்டுகளாக பணி நிரந்தரம் கேள்விக்குறியாகி கண்ணீர் வடிக்கின்றனர்.



அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 'அரசு கலை கல்லுாரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் பிஎச்.டி.,/நெட்/செட் என யு.ஜி.சி., தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரப்படுத்தப்படுவர்' என, 2010ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். ஆனால் 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.



அடுத்து அ.தி.மு.க., ஆட்சி வந்தது. அப்போது 'அரசு கல்லுாரிகளில் பணியாற்றும் யு.ஜி.சி., தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர் நீண்டகால பணி அனுபவம் அடிப்படையில் நிரந்தரம் செய்யப்படுவர்' என, அடுத்து 2018ல் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. பின் 1146 கவுரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக தேர்வு செய்ய 2020 மார்ச் 21ல் உத்தரவு பிறப்பித்து தேர்வுக் குழு நியமனம் செய்யப்பட்டது. 2021 பிப்., 15 முதல் 18 வரை சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேர்முக தேர்வு நடக்கவில்லை.



latest tamil news


மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்காக பல மாதங்கள் காத்திருந்த நிலையில், சிறப்பு டி.ஆர்.பி., மூலம் நியமனம் செய்யப்படுவர் என அறிவித்து, அ.தி.மு.க., நியமித்த தேர்வுக் குழு கலைக்கப்பட்டது. தற்போது வரை இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.



பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மாநிலத்தில் 1996 -- 2000 வரை கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில் எழுத்துத் தேர்வு முறையே பின்பற்றப்பட்டது. 2006க்கு பின் நேர்காணல் முறை வந்தது. நீதிமன்றங்களும் கல்லுாரி ஆசிரியர் பணிக்கு நேர்முகத்தேர்வு முறை சிறந்தது என தீர்ப்புகள் வழங்கின. யு.ஜி.சி.,யும் இதையே வலியுறுத்துகிறது. நாங்கள் 16 ஆண்டுகளாக நேர்காணலுக்கு தயாராகி வந்த நிலையில் திடீரென அரசு எங்களை எழுத்துத் தேர்வுக்கு தள்ளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நேர்காணலுக்கு தயாராகியுள்ள 1146 பேரும் 45 வயதை கடந்து, குடும்பம், பொருளாதார நெருக்கடி, குறைந்த சம்பளத்தால் கடும் மன உளைச்சலில் உள்ளோம்.2010ல் கருணாநிதி அளித்த உத்தரவுப்படி நேர்காணல் மூலம் பணி நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் எங்கள் கண்ணீர் துடைக்க வேண்டும், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalidasan - Tamilnadu ,இந்தியா
03-அக்-202220:52:42 IST Report Abuse
kalidasan தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கண்ணீருடன் காத்துக்கொண்டிருக்கும் தொகுப்பூதிய /பகுதிநேர விரிவுரையாளர்கள் - தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொகுப்பூதிய /பகுதி நேர விரிவுரையாளராக ஏறத்தாழ 1300-க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகள் தொய்வின்றி பணியாற்றி வந்தனர். தற்போது TRB போட்டித் தேர்வின் மூலம் 1024 விரிவுரையாளர்களை நியமித்ததால் அவர்கள் அனைவரும் கல்லூரியில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியேற்றப்பட்டனர். மேலும் 1/ 10 /2022 முதல் எந்த ஒரு தொகுப்பூதிய/ பகுதிநேர விரிவுரையாளரும் கல்லூரியில் பணிபுரிய கூடாது என்று தொழில்நுட்பகல்வி இயக்க ஆணையரின் ஆணைக்கிணங்க எல்லோரும் ஒட்டுமொத்தமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது 1,300 பேர் குடும்பங்களும் வாழ வழியின்றி தவித்து வரும் சூழல் உள்ளது . இந்த வேலை ஒன்றையே வாழ்க்கையின் அடையாளமாக நம்பியிருந்த தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்கள் ஏமாற்றம் அடைந்ததை எண்ணி மீளா துயரத்தில் உள்ளனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நம்பியிருந்த தொகுப்பூதிய விரிவுரையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ்நாடு அரசு அவர்களின் இயலாத நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்குமா என்று காத்திருக்கும் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் மற்றும் பகுதிநேர விரிவுரையாளர்கள்.
Rate this:
Cancel
kalidasan - Tamilnadu ,இந்தியா
03-அக்-202220:49:13 IST Report Abuse
kalidasan ஐயா, அரசு கலை &அறிவியல் கல்லூரியை மட்டும் பேசும் நீங்கள் . அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து,தற்போது அப்பணி இல்லாமல் மீளாத்துயரில் உள்ள தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் நிலை என்ன என்பதை சற்றே ஆராய்ந்து பாருங்கள்.
Rate this:
Cancel
Krish - Bengalooru,இந்தியா
03-அக்-202219:35:59 IST Report Abuse
Krish ' விடியல் ஆட்சின் அவலங்கள் ' ,என்ற தலைப்பில் ஒரு படமே எடுக்கலாம்போல் உள்ளது தி மு க ஆட்சி நீட் தேர்வை பற்றி குறை கூறும் இந்த கண்ணீர் துளிகல் [ ஆம் தந்தை பெரியார் தி மு க வினரை இப்படித்தான் அழைப்பார் ] , பேராசியர் வேலை , பள்ளி ஆசிரியர்கள் வேலை , மற்றும் தமிழக அரசு பணிகளுக்கு ஏன் தேர்வு ,நேர் கானல் அப்படியே வாங்கிய மார்க்குகள் அடிப்படியில் குடுப்பதுதானே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X