சீனா தேசிய தினத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள்

Added : அக் 03, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி : சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டுக்கு அந்நாடு தயாராகி வருகிறது. அதிபர் ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக நீடிக்க ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. அந்நாட்டில் நடந்த தேசிய தினத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.1949- அக்., 1 சீனா பிரதமரான மா சேதுங் சீன தேசிய கொடியை டையனமென் சதுக்கத்தில் ஏற்றினார். சீன மக்கள் குடியரசு
China, National Day, Chinese National Day, protest

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டுக்கு அந்நாடு தயாராகி வருகிறது. அதிபர் ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக நீடிக்க ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. அந்நாட்டில் நடந்த தேசிய தினத்திற்கு எதிராக உலகம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.



1949- அக்., 1 சீனா பிரதமரான மா சேதுங் சீன தேசிய கொடியை டையனமென் சதுக்கத்தில் ஏற்றினார். சீன மக்கள் குடியரசு என்ற கம்யூனிஸ்டு நாடு பிறந்துள்ளது என அறிவித்தார். அக்., 2- புதிய அரசானது சீனாவின் தேசிய நாளாக அக்., 1 ஐ கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் புதுடில்லி சீன தூதரகத்திற்கு வெளியே திபெத்திய இளைஞர்கள் நேற்று தேசிய நாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், திபெத்தியர்களிடம் இருந்து பெருமளவில் மரபணுக்களை சேகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


latest tamil news



இதுதவிர உலக நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜப்பானின் டோக்கியோவில் மக்கள் சாலைகளில் இறங்கி, திபெத், ஜின்ஜியாங், மங்கோலியா, ஹாங்காங் மற்றும் தைவான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து சிறுபான்மை பகுதிகளுக்கு உள்ளேயும் புகுந்த சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக, போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



ஆஸ்திரியா நாட்டின் வியன்னா சீன தூதரகத்தின் முன் சிறிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. சீனாவுக்கு எதிரான போஸ்டர்கள் மற்றும் திபெத்திய கொடிகளை ஏந்தி போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். சீன அரசின் பல்வேறு சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சின் பாரீஸ் நகரில் பல்வேறு சமூக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.



இந்த போராட்டத்தில் ஹாங்காங், பிரான்சில் உள்ள உய்குர் இன மக்கள், மங்கோலியர்கள், தைவானியர்கள் மற்றும் வியட்னாம் குழுக்களும் கலந்து கொண்டன. அமெரிக்காவின் நியூயார்க், கலிபோர்னியா மற்றும் கனடா நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-அக்-202212:39:26 IST Report Abuse
Ramesh Sargam சீனாவுக்கு ஆதரவாக திமுக நிற்கும் என நினைக்கிறேன்.
Rate this:
Cancel
03-அக்-202211:18:59 IST Report Abuse
ராமகிருஷ்ணன் பிற நாடுகளில் உள்ள சப்பை மூக்கன்கள் எதிர்ப்பு காட்டுகின்றனர்.
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
03-அக்-202210:40:53 IST Report Abuse
Yogeshananda தேசத் துரோகிகள் உண்டியல் குலுக்கிகளே எலும்பு துண்டுகள் திராவிட மாடல் திருடர்களிடமிருந்து வருகிறதா?
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
03-அக்-202213:25:00 IST Report Abuse
MANI DELHIஅருணன், முத்தரசன் போன்ற கைக்கூலிகள் எல்லாம் சீனவிற்கே தேவையற்றவர்கள். இதுல அருணன் ஒரு விரிவுரையாளர். இவனது அறிவே நாட்டிற்கு தேவை இல்லை. இவன் மாணவர்கள் நாட்டிற்கு கோடாலி காம்பாக ஆகாமல் இருக்கவேண்டும். நாட்டுக்கு ஒரு ஜே என் யு தலைவலி போதும். நல்லகண்ணு, ராஜா போன்றற மனிதர்கள் தமிழினத்தின் கரும்புள்ளிகள் என்பது தான் சரி.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X