தி.மு.க., அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகம்: சொல்கிறார் செல்லூர் ராஜூ

Updated : அக் 03, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
மதுரை: ''தி.மு.க., அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டது; மக்கள் வரிப்பணத்தில் அவர்களும் 'ஓசி' சலுகை அனுபவிக்கிறார்களே" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:தீபாவளியை முன்னிட்டு முக்கிய பொருட்கள் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை

மதுரை: ''தி.மு.க., அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகமாகிவிட்டது; மக்கள் வரிப்பணத்தில் அவர்களும் 'ஓசி' சலுகை அனுபவிக்கிறார்களே" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.



latest tamil news




மதுரையில் அவர் கூறியதாவது:
தீபாவளியை முன்னிட்டு முக்கிய பொருட்கள் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் ஆம்னி பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு சிறப்பு பஸ்கள் அதிகம் இயக்க வேண்டும்.

தி.மு.க., அமைச்சர்களுக்கு வாய்க்கொழுப்பு அதிகரித்து விட்டது. அவர்களும் மக்கள் வரிப்பணத்தில் தான் கார், வீடு, ஓசி பணியாட்கள் என அனைத்தும் 'ஓசி'யாக அனுபவிக்கின்றனர். பெண்களை பார்த்து 'ஓசி பயணம்' என ஒரு அமைச்சர் வாய்க்கொழுப்பாக பேசுகிறார். இதை தவிர்க்கவே இலவசம் என கூறாமல் 'விலையில்லா' என மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அ.தி.மு.க., ஆட்சியில் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., 'யானை பாகன்' போல் இருந்தார். இந்த ஆட்சியில் குதிரை ஓட்டியாக பயன்படுத்துகின்றனர். திறமையுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தி.மு.க., அரசு நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும். ரேஷனில் தற்போது அரிசி கடத்தல் அதிகரிக்கிறது. அத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கைகள் கட்டப்பட்டுள்ளது.


latest tamil news




'போதை பொருள் விற்பனை, கடத்தல் அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை சர்வாதிகாரியாக மாறவில்லை. மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணி, அமைச்சர் தியாகராஜன் சொல்வதை மட்டுமே கேட்கிறார். அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பாதாளச் சாக்கடை திட்டம் உட்பட எந்த பணிகளும் சரியாக நடக்கவில்லை, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
03-அக்-202218:21:00 IST Report Abuse
Anantharaman Srinivasan இக்கரைக்கு அக்கரை பச்சைபோல் தெரியும். ஆனால் ஈயத்துக்கும் பித்தளைக்கும் உள்ளமதிப்பு பஞ்சலோகத்தை விட குறைவுதான்..
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
03-அக்-202216:47:20 IST Report Abuse
sankar அய்யா விஞ்ஞனி,
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
03-அக்-202216:14:22 IST Report Abuse
Mohan நீங்க எல்வாம் அந்த வாயை வச்சி மக்களை கிச்சு கிச்சு பண்ணுனீங்க. அவங்க வாயை வச்சி வசை பாடுறாங்க. மக்களும் தொடர்ந்து படுறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X